முகப்பு › அத்தியாயங்கள் › As-Saaffaat அத்தியாயம்
As-Saaffaat அத்தியாயம் الصافات
182 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلصَّٰٓفَّٰتِ صَفًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version அணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version கடுமையாக விரட்டுகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱلتَّٰلِيَٰتِ ذِكْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version வேதத்தை ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ إِلَٰهَكُمْ لَوَٰحِدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَٰرِقِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அவன்தான்) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் (-அதிபதி) ஆவான். இன்னும் (அவன்) சூரியன் உதிக்கும் இடங்களையும் (அது மறையும் இடங்களையும்) நிர்வகிப்பவன் ஆவான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَٰنٍ مَّارِدٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (நட்சத்திரங்களால் வானத்தை அலங்கரித்தோம்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மிக உயர்ந்த (வானவக்) கூட்டத்தினரின் பக்கம் (அவர்களின் பேச்சை) அவர்களால் செவியுற முடியாது. எல்லா பக்கங்களில் இருந்தும் (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (வானத்தை விட்டு) தடுக்கப்படுவதற்காக (அவர்கள் மீது நட்சத்திரங்கள் எறியப்படும்). இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) நிரந்தரமான தண்டனை உண்டு.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ ثَاقِبٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version எனினும், (வானவர்களின் பேச்சை) யார் திருட்டுத்தனமாக திருடுகின்றாரோ (கள்ளத்தனமாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கின்றாரோ) எரிக்கின்ற நெருப்புக் கங்கு அவரை பின்தொடரும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ إِنَّا خَلَقْنَٰهُم مِّن طِينٍ لَّازِبٍۭ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் (-மறுமையை மறுப்பவர்கள்) படைப்பால் பலமிக்கவர்களா அல்லது எவர்களை நாம் படைத்தோமோ (அவர்கள் பலமிக்கவர்களா? அதாவது வானம், பூமி, மலைகள், வானவர்கள் போன்ற படைப்புகளா)? என்று அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அன்றி, (நபியே! இந்த குர்ஆன் உமக்கு கொடுக்கப்பட்டபோது) நீர் ஆச்சரியப்பட்டீர். இன்னும் அவர்கள் (உம்மையும் இந்த வேதத்தையும்) கேலி செய்தனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِذَا رَأَوْا۟ ءَايَةً يَسْتَسْخِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) பரிகாசம் செய்கிறார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَقَالُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version தெளிவான சூனியமே தவிர இது வேறில்லை என்று கூறுகின்றனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நாங்கள் இறந்து, எலும்புகளாகவும், (எங்கள் சதை) மண்ணாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “இன்னும், எங்கள் முந்திய முன்னோர்களுமா (எழுப்பப்படுவார்கள்)?” (என்று அவர்கள் கேட்கிறார்கள்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “ஆம், (நீங்கள் அனைவரும் எழுப்பப்படுவீர்கள். அப்போது) நீங்கள் மிகவும் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்” என்று கூறுவீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதுவெல்லாம் (-மறுமை நிகழ்வதெல்லாம்) ஒரே ஒரு பலமான சப்தம்தான். அப்போது அவர்கள் (மறுமையின் காட்சிகளை கண்கூடாகப்) பார்ப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَقَالُوا۟ يَٰوَيْلَنَا هَٰذَا يَوْمُ ٱلدِّينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version எங்கள் நாசமே! என்று அவர்கள் கூறுவார்கள். (அப்போது அவர்களுக்குக் கூறப்படும் ஆம்!) இதுதான் கூலி கொடுக்கப்படும் நாள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இதுதான் தீர்ப்பு நாள் ஆகும். இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அநியாயம் செய்தவர்களையும் அவர்களின் இனத்தவர்களையும் (அவர்களைப் பின்பற்றியவர்களையும் அவர்களைப் போன்று நிராகரித்த மற்றவர்களையும்) இன்னும், அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அல்லாஹ்வை அன்றி (அவர்கள் வணங்கியவர்களை கொண்டுவாருங்கள்)! ஆக, அவர்களுக்கு நரகத்தின் பாதையின் பக்கம் வழிகாட்டுங்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَقِفُوهُمْ إِنَّهُم مَّسْـُٔولُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களை நிறுத்துங்கள்! நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் உங்களுக்குள் உதவிக் கொள்ளவில்லை?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (தங்கள் இறுதி தங்குமிடத்தைப் பற்றி) விசாரித்துக் கொள்வார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் (-வழிகெட்டவர்கள் வழிகெடுத்தவர்களை நோக்கி) கூறுவார்கள்: நன்மையை விட்டுத் தடுக்க நீங்கள் எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) கூறுவார்கள்: மாறாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَٰنٍۭ بَلْ كُنتُمْ قَوْمًا طَٰغِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (உங்களை வழிகெடுக்க) எங்களுக்கு உங்கள் மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் எல்லை மீறுகின்ற மக்களாக இருந்தீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ إِنَّا لَذَآئِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, நம் மீது நமது இறைவனுடைய (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விட்டது. நிச்சயமாக நாம் (தண்டனையை) சுவைப்பவர்கள்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَغْوَيْنَٰكُمْ إِنَّا كُنَّا غَٰوِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவர்கள் (வழிகெட்டவர்களும் வழிகெடுத்தவர்களும்) அந்நாளில் வேதனையில் (ஒன்றாக) கூட்டாகுவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நாம் இப்படித்தான் குற்றவாளிகளுடன் நடந்து கொள்வோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பெருமை அடி(த்து புறக்கணி)ப்பவர்களாக இருந்தனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍۭ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நிச்சயமாக நாங்கள் விட்டுவிடுவோமா? என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மாறாக, அவர் (-அந்தத் தூதர்) சத்தியத்தைக் கொண்டு வந்தார். இன்னும் தூதர்களை உண்மைப்படுத்தினார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நீங்கள் வலிதரும் வேதனையை சுவைப்பீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்கள் செய்து வந்ததற்கே அன்றி நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أُو۟لَٰٓئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அறியப்பட்ட உணவு அவர்களுக்கு உண்டு.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَوَٰكِهُ وَهُم مُّكْرَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அதாவது) பழங்கள் (அவர்களுக்கு உண்டு). இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்பமிகு சொர்க்கங்களில் (இருப்பார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
عَلَىٰ سُرُرٍ مُّتَقَٰبِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மதுரமான தெளிவான நீரைப் போன்ற மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بَيْضَآءَ لَذَّةٍ لِّلشَّٰرِبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்த மது வெண்மையாக அருந்துபவர்களுக்கு மிக இன்பமானதாக இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதில் (அறிவைப் போக்கக்கூடிய) போதையும் இருக்காது (தலைவலி, வயிற்று வலி இருக்காது.) அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களிடம் பார்வைகளை தாழ்த்திய கண்ணழகிகள் இருப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீக்கோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (நரகவாசிகளைப் பற்றி) விசாரிப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قَالَ قَآئِلٌ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான் என்று அவர்களில் கூறக்கூடிய ஒருவர் கூறுவார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் இருக்கின்றாயா என்று (உலகில் வாழும் போது என்னிடம்) கூறுவான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “நாம் இறந்துவிட்டால் (பின்னர்) எலும்புகளாகவும் மண்ணாகவும் மாறி விட்டால், நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்கு) கூலி கொடுக்கப்படுவோமா?” (என்று அவன் கூறுவான்)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: நீங்கள் (நரகத்தில் உள்ளவர்களை) எட்டிப்பார்ப்பீர்களா? (அது முடியுமா?) என்று கூறுவார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர் (-அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை நாசமாக்குவதற்கு நெருக்கமாக இருந்தாய்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version என் இறைவனின் அருள் இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) ஆஜர்படுத்தப்படுபவர்களில் ஆகி இருப்பேன்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “ஆக, (இந்த சொர்க்க வாழ்க்கையில்) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லையே!”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “எங்கள் முதல் மரணத்தைத் தவிர (வேறு மரணம் எங்களுக்கு இல்லை). இன்னும் நாங்கள் தண்டனை செய்யப்படுபவர்களாக இல்லை.”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَٰمِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அமல் செய்பவர்கள் இது போன்றதற்காக (-இதுபோன்ற நன்மைகளை பெறுவதற்காக) அமல் செய்யட்டும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா அல்லது ஸக்கூம் என்ற கள்ளி மரமா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّا جَعَلْنَٰهَا فِتْنَةً لِّلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நாம் இணைவைப்பவர்களுக்கு அதை ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதன் கனிகள் ஷைத்தான்களின் (-பாம்புகளின்) தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِنَّهُمْ لَـَٔاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும் அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பின்னர் நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீரில் இருந்து கலக்கப்படும். (அவர்கள் உண்ணுகின்ற கள்ளிமர பழத்துடன் கடுமையான உஷ்ணமுள்ள நீரும் கலந்து கொடுக்கப்படும்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (கள்ளிப்பழத்தை உண்டு கொதி நீரைக் குடித்த) பிறகு நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவர்கள் (-இந்த இணைவைப்பவர்கள்) தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَهُمْ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ يُهْرَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களின் (-மூதாதைகளின்) அடிச்சுவடுகளில் (அவற்றை கண்மூடித்தனமாக பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகின்றார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இவர்களுக்கு முன்னர் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழிகெட்டுள்ளனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்களை நாம் அனுப்பினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (தண்டனையில் இருந்து) பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version திட்டவட்டமாக நூஹ் நம்மை அழைத்தார். பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், அவரது சந்ததிகளைத்தான் (உலகில்) மீதமானவர்களாக நாம் ஆக்கினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், பிற்காலத்தில் வருபவர்களில் அவரைப் பற்றிய நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
سَلَٰمٌ عَلَىٰ نُوحٍ فِى ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் உண்டாகட்டும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நாம் இவ்வாறுதான் நல்லவர்களுக்கு கூலி கொடுப்போம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍ سَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version தனது தந்தை இன்னும் தனது மக்களை நோக்கி, எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَئِفْكًا ءَالِهَةً دُونَ ٱللَّهِ تُرِيدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அல்லாஹ்வை அன்றி பொய்யாக பல தெய்வங்களையா (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்கள்?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (அவன் ஒருவனை மட்டும் வணங்காமல் ஏன் கற்பனையாக பல தெய்வங்களை உருவாக்கினீர்கள்?)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَنَظَرَ نَظْرَةً فِى ٱلنُّجُومِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَقَالَ إِنِّى سَقِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version தொடர்ந்து அவர் கூறினார், “நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்”.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, அவர்கள் முகம் திரும்பியவர்களாக அவரை விட்டு விலகிச் சென்றனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அவர்களின் தெய்வங்கள் பக்கம் (இப்ராஹீம்) விரைந்தார். ஆக, அவர் (அந்த சிலைகளை நோக்கி) கூறினார்: “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَا لَكُمْ لَا تَنطِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “உங்களுக்கு என்ன ஏற்பட்டது? நீங்கள் ஏன் பேசுவதில்லை?”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அவர்கள் விரைந்தவர்களாக அவர் பக்கம் முன்னோக்கி வந்தனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர் கூறினார்: “நீங்கள் (கற்களிலும் கட்டைகளிலும்) எதை செதுக்கி உருவாக்குகிறீர்களோ அதை வணங்குகிறீர்களா?”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான்.”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَٰنًا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் கூறினார்கள்: “அவருக்கு ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள். (அதில் விறகுகளை போட்டு நெருப்பு எரியுங்கள்!) ஆக, அந்த எரியும் நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்!”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَسْفَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். ஆக, நாம் அவர்களைத்தான் மிகத் தாழ்ந்தவர்களாக ஆக்கினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், அவர் கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّٰلِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “என் இறைவா! எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَبَشَّرْنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ قَالَ يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்தபோது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” (மகனார்) கூறினார்: “என் தந்தையே! உமக்கு எது ஏவப்படுகிறதோ அதை நீர் நிறைவேற்றுவீராக! இன் ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது) பொறுமையாக இருப்பவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அப்போது அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَنَٰدَيْنَٰهُ أَن يَٰٓإِبْرَٰهِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், “இப்ராஹீமே!” என்று நாம் அவரை அழைத்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْبَلَٰٓؤُا۟ ٱلْمُبِينُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَفَدَيْنَٰهُ بِذِبْحٍ عَظِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
سَلَٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இப்ராஹீமுக்கு ஸலாம் உண்டாகட்டும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَبَشَّرْنَٰهُ بِإِسْحَٰقَ نَبِيًّا مِّنَ ٱلصَّٰلِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَبَٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَٰقَ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِۦ مُبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் இருக்கிறார். தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கிறார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version திட்டவட்டமாக மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் அருள்புரிந்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَنَجَّيْنَٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَنَصَرْنَٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், அவர்களுக்கு உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆகிவிட்டார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَءَاتَيْنَٰهُمَا ٱلْكِتَٰبَ ٱلْمُسْتَبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَهَدَيْنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாகட்டும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக இல்யாஸ் (நமது) தூதர்களில் உள்ளவர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர் தனது மக்களுக்கு, “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَٰلِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ‘பஃல்’ சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா? மிக அழகிய படைப்பாளனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (நரகத்தில் தண்டனை அனுபவிக்க) ஆஜர்படுத்தப்படுவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான (இணைவைக்காத) அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
سَلَٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இல்யாஸுக்கு(ம் அவரது மக்களில் அவரை பின்பற்றியவர்களுக்கும்) ஸலாம் உண்டாகட்டும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நல்லவர்களுக்கு நாம் இப்படித்தான் கூலி கொடுப்போம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّ لُوطًا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் ஒருவர்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِذْ نَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவரையும் அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூர்வீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا عَجُوزًا فِى ٱلْغَٰبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (தண்டனையில்) தங்கி விடுபவர்களில் (ஒருவராக இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு மூதாட்டியைத் தவிர.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அவரையும் முஃமின்களையும் பாதுகாத்த) பிறகு, மற்றவர்களை நாம் அழித்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَبِٱلَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). (நபியை நிராகரிப்பவர்களே!) நீங்கள் (இந்த வரலாறுகளை) சிந்தித்து புரியமாட்டீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக யூனுஸ், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (பொருள்களால்) நிரம்பிய கப்பலை நோக்கி அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (அவர் சென்ற கப்பல் நின்றுவிடவே) அவர் சீட்டு குலுக்கிப் போட்டார். ஆக, குலுக்கலில் பெயர் எடுக்கப்பட்டவர்களில் அவர் ஆகிவிட்டார். (அவரது பெயர் எழுதப்பட்ட சீட்டு வந்தது.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (அவர் தன்னை கடலில் எறியவே) அவரை திமிங்கிலம் விழுங்கியது. அவர் (தனது இறைவனின் கட்டளை இன்றி கடலுக்கு சென்றதால்) பழிப்புக்குரிய செயலை செய்தவர் ஆவார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, நிச்சயமாக அவர் அல்லாஹ்வை அதிகம் (தொழுது) துதிப்பவர்களில் இருந்திருக்கவில்லை என்றால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதனுடைய வயிற்றில் (மக்கள் மறுமையில்) எழுப்பப்படுகின்ற நாள் வரை தங்கி இருந்திருப்பார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَنَبَذْنَٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَرْسَلْنَٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகவே, நாம் அவர்களுக்கு ஒரு காலம் வரை சுகமளித்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, (நபியே! நீர்) அவர்களிடம் (-இந்த மக்காவாசிகளிடம்) விளக்கம் கேட்பீராக! உமது இறைவனுக்கு பெண் பிள்ளைகளும், அவர்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَمْ خَلَقْنَا ٱلْمَلَٰٓئِكَةَ إِنَٰثًا وَهُمْ شَٰهِدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version வானவர்களை பெண்களாகவா நாம் படைத்தோம், அவர்கள் (அதை) பார்த்துக் கொண்டு (அங்கு ஆஜராகி) இருந்தார்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்களது பெரும் பொய்யில் ஒன்றாக கூறுகிறார்கள்:
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்” என்று. நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் ஆவர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் (தனக்கு) தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வாறு) எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَلَا تَذَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَمْ لَكُمْ سُلْطَٰنٌ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அல்லது, உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأْتُوا۟ بِكِتَٰبِكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் (கூற்றுக்கு ஆதாரமாக இருக்கின்ற) வேதத்தைக் கொண்டு வாருங்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் ஓர் உறவை அவர்கள் ஏற்படுத்தினர். நிச்சயமாக அவர்கள் (நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று திட்டவட்டமாக அந்த ஜின்கள் அறிந்து கொண்டனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَٰتِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதன் மூலம் (யாரையும்) நீங்கள் வழிகெடுப்பவர்களாக இல்லை,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version யார் நரகத்தில் எரிந்து பொசுங்குவாரோ அவரைத் தவிர. (நரகவாசிகள் என்று முடிவாகிவிட்டவர்களைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌ مَّعْلُومٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (வானவர்கள் கூறுவார்கள்:) “எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை வணங்குவதற்காக) அணிவகுத்து நிற்பவர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை) துதித்து தொழுபவர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக (இந்த மக்காவாசிகள்) கூறுபவர்களாக இருந்தனர்:
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “நிச்சயமாக முன்னோரிடம் இருந்த வேதம் எங்களிடம் இருந்திருந்தால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நாங்களும் அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களாக ஆகியிருப்போம்.”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَكَفَرُوا۟ بِهِۦ فَسَوْفَ يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக (அது வந்த பின்னர் இப்போது) அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். (தங்கள் முடிவை) அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version திட்டவட்டமாக நமது வாக்கு தூதர்களான நமது அடியார்களுக்கு முந்திவிட்டது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அவர்கள்தான் உதவப்படுவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَٰلِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நமது இராணுவம்தான் வெற்றி பெறுவார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை விலகி இருப்பீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், (நபியே!) அவர்களைப் பார்ப்பீராக! (அவர்களுக்கு இறங்கப் போகும் தண்டனையை அவர்கள்) விரைவில் பார்ப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக வேண்டுகின்றனரா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அது அவர்களின் முற்றத்தில் (அதிகாலையில்) இறங்கிவிட்டால் எச்சரிக்கப்பட்டவர்களின் (அந்த) அதிகாலை மிக கெட்டதாக இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version சிறிது காலம் வரை அவர்களை விட்டு விலகி இருப்பீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராக! ஆக, (அவர்களுக்கு இறங்கப் போகின்ற தண்டனையை) விரைவில் அவர்கள் பார்ப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
سُبْحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَسَلَٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இறைத்தூதர்களுக்கு ஸலாம் உண்டாகுக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் உரித்தாகுக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
← Yaseen அத்தியாயம்
Saad அத்தியாயம் →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→
அரபு மூலமும் மொழிபெயர்ப்புகளும் Tanzil மற்றும் QuranEnc வழியாக — சொல்லுக்குச் சொல், மாற்றப்படாமல் · மொழிபெயர்ப்புகள் அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரியவை; குர்ஆன் அல்ல
இது ஓர் ஆய்வு உதவியாகும்; மார்க்கத் தீர்ப்பின் ஆதாரம் அல்ல.