caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saad அத்தியாயம் ص

88 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 38

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ صٓ وَٱلْقُرْءَانِ ذِى ٱلذِّكْرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸாத்![1] அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆன் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى عِزَّةٍ وَشِقَاقٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, நிராகரிப்பவர்கள் பிடிவாதத்திலும் முரண்பாட்டிலும் இருக்கிறார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ فَنَادَوا۟ وَّلَاتَ حِينَ مَنَاصٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் எத்தனையோ பல தலைமுறை(மக்)களை நாம் அழித்தோம். (நம் வேதனை வந்தபோது அவர்கள் நம்மிடம் மன்றாடி பிரார்த்தித்து நம்மை) அழைத்தனர். (ஆனால், வேதனை வந்த) அந்த நேரம் தப்பித்து ஓடுவதற்குரிய நேரம் அல்ல.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَعَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ وَقَالَ ٱلْكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٌ كَذَّابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் இருந்தே ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினர்: “இவர் ஒரு சூனியக்காரர், ஒரு பெரும் பொய்யர்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَجَعَلَ ٱلْـَٔالِهَةَ إِلَٰهًا وَٰحِدًا إِنَّ هَٰذَا لَشَىْءٌ عُجَابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“இவர் தெய்வங்களை (எல்லாம்) ஒரே ஒரு தெய்வமாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱنطَلَقَ ٱلْمَلَأُ مِنْهُمْ أَنِ ٱمْشُوا۟ وَٱصْبِرُوا۟ عَلَىٰٓ ءَالِهَتِكُمْ إِنَّ هَٰذَا لَشَىْءٌ يُرَادُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் சென்று, உங்கள் தெய்வங்கள் மீது உறுதியாக இருங்கள்! நிச்சயமாக (முஹம்மது கூறுகின்ற) இது (நமக்கு தீமையும் அவருக்கு தலைமைத்துவமும்) நாடப்பட்ட ஒரு விஷயம்தான் என்று கூறி அவர்களில் உள்ள தலைவர்கள் சென்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَا سَمِعْنَا بِهَٰذَا فِى ٱلْمِلَّةِ ٱلْـَٔاخِرَةِ إِنْ هَٰذَآ إِلَّا ٱخْتِلَٰقٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதை வேறு மார்க்கத்தில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர வேறு இல்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَءُنزِلَ عَلَيْهِ ٱلذِّكْرُ مِنۢ بَيْنِنَا بَلْ هُمْ فِى شَكٍّ مِّن ذِكْرِى بَل لَّمَّا يَذُوقُوا۟ عَذَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநமக்கு மத்தியில் (-மனிதராக வாழ்கின்ற) அவர் மீது வேதம் இறக்கப்பட்டதா? (என்று கேலி செய்கின்றனர்.) மாறாக அவர்கள் எனது வேதத்தில் சந்தேகத்தில் இருக்கின்றனர். மாறாக, அவர்கள் (இதுவரை) எனது வேதனையை சுவைக்கவில்லை. (அப்படி சுவைத்திருந்தால் இந்த வேதத்தை உடனே நம்பியிருப்பார்கள்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَحْمَةِ رَبِّكَ ٱلْعَزِيزِ ٱلْوَهَّابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகண்ணியமிக்கவனான, மகா கொடை வள்ளலான உமது இறைவனின் அருளுடைய பொக்கிஷங்கள் அவர்களிடம் இருக்கின்றனவா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَمْ لَهُم مُّلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَلْيَرْتَقُوا۟ فِى ٱلْأَسْبَٰبِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி இருக்கின்றதா? அப்படி இருந்தால் அவர்கள் (வானங்களின்) வாசல்களில் ஏறட்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

جُندٌ مَّا هُنَالِكَ مَهْزُومٌ مِّنَ ٱلْأَحْزَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவர்கள்) அந்த விஷயத்தில் (-உம்மை பொய்ப்பிக்கின்ற விஷயத்தில்) தோற்கடிக்கப்படுகின்ற (-கேவலமான) இராணுவம்தான். (இவர்கள் இப்லீஸின்) கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَفِرْعَوْنُ ذُو ٱلْأَوْتَادِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் நூஹ் உடைய மக்களும் ஆது (சமுதாயமு)ம் ஆணிகளை உடைய ஃபிர்அவ்னும் (நபிமார்களை) பொய்ப்பித்தனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَثَمُودُ وَقَوْمُ لُوطٍ وَأَصْحَٰبُ لْـَٔيْكَةِ أُو۟لَٰٓئِكَ ٱلْأَحْزَابُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸமூது சமுதாயமும் லூத்துடைய மக்களும் தோட்டமுடையவர்களும் பொய்ப்பித்தனர். அவர்கள்தான் (பாவத்திற்காக ஒன்றுகூடிய) குழுக்கள் ஆவார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் எல்லோரும் தூதர்களை பொய்ப்பித்தனர். ஆகவே, எனது தண்டனை (அவர்களுக்கு) உறுதியானது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً مَّا لَهَا مِن فَوَاقٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு (அந்த சப்தத்திற்கு) துண்டிப்பு, இடைவெளி இருக்காது. (அந்த வேதனை இடைவெளி இல்லாத ஒரே சப்தமாக இருக்கும்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَقَالُوا۟ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ ٱلْحِسَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினர்: எங்கள் இறைவா! விசாரணை நாளுக்கு முன்பாக எங்களுக்கு எங்கள் பத்திரத்தை, ஆவணத்தை தீவிரப்படுத்து. (மறுமையில் எங்களுக்கு நீ என்ன கொடுக்கப்போகிறாயோ அது நல்லதாக இருந்தாலும் சரி, அல்லது கெட்டதாக இருந்தாலும் சரி அதை ஒரு பத்திரத்தில் எழுதி உலகத்திலேயே எங்களுக்கு கொடுத்துவிடு.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذْكُرْ عَبْدَنَا دَاوُۥدَ ذَا ٱلْأَيْدِ إِنَّهُۥٓ أَوَّابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுவதை சகிப்பீராக! நமது அடியார் (அல்லாஹ்வின் விஷயத்தில், அல்லாஹ்வை வணங்குவதில்) மிக வலிமை, உறுதி உடைய தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (அல்லாஹ்வின் பக்கம்) முற்றிலும் திரும்பக்கூடியவர் ஆவார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّا سَخَّرْنَا ٱلْجِبَالَ مَعَهُۥ يُسَبِّحْنَ بِٱلْعَشِىِّ وَٱلْإِشْرَاقِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் (அவருக்கு) மலைகளை வசப்படுத்தினோம். அவை அவருடன் மாலையிலும் காலையிலும் (அல்லாஹ்வை) துதிக்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلطَّيْرَ مَحْشُورَةً كُلٌّ لَّهُۥٓ أَوَّابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவருக்கு முன்பாக) ஒன்று சேர்க்கப்பட்ட பறவைகளையும் (அவருக்கு நாம்) வசப்படுத்திக் கொடுத்தோம். அவை எல்லாம் அவருக்கு கீழ்ப்படிந்தவையாக இருந்தன. (எல்லாம் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வை துதிப்பவையாக இருந்தன.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَشَدَدْنَا مُلْكَهُۥ وَءَاتَيْنَٰهُ ٱلْحِكْمَةَ وَفَصْلَ ٱلْخِطَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவருடைய ஆட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும் (-நபித்துவத்தையும் சட்ட நுணுக்கத்தையும்) மிகத்தெளிவான, மிக உறுதியான பேச்சையும் கொடுத்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَهَلْ أَتَىٰكَ نَبَؤُا۟ ٱلْخَصْمِ إِذْ تَسَوَّرُوا۟ ٱلْمِحْرَابَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) வழக்காளிகளுடைய செய்தி உம்மிடம் வந்ததா? (அவர் அல்லாஹ்வை வணங்கி வந்த) வீட்டின் முன்பக்கமாக அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِذْ دَخَلُوا۟ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوا۟ لَا تَخَفْ خَصْمَانِ بَغَىٰ بَعْضُنَا عَلَىٰ بَعْضٍ فَٱحْكُم بَيْنَنَا بِٱلْحَقِّ وَلَا تُشْطِطْ وَٱهْدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தாவூத் (நபி) இடம் நுழைந்த போது அவர் அவர்களைப் பார்த்து திடுக்கிற்றார். அவர்கள் கூறினர்: பயப்படாதீர். நாங்கள் இரு வழக்காளிகள். எங்களில் ஒருவர் ஒருவர் மீது அநியாயம் செய்தார். ஆகவே! எங்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக! அநீதி இழைத்து விடாதீர். நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ هَٰذَآ أَخِى لَهُۥ تِسْعٌ وَتِسْعُونَ نَعْجَةً وَلِىَ نَعْجَةٌ وَٰحِدَةٌ فَقَالَ أَكْفِلْنِيهَا وَعَزَّنِى فِى ٱلْخِطَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக இவர் எனது சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கு ஒரே ஓர் ஆடுதான் உள்ளது. ‘அதையும் எனக்கு தருவாயாக!’ என்று அவர் கூறுகிறார். அவர் வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦ وَإِنَّ كَثِيرًا مِّنَ ٱلْخُلَطَآءِ لَيَبْغِى بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٌ مَّا هُمْ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسْتَغْفَرَ رَبَّهُۥ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(தாவூத்) கூறினார்: உனது ஆட்டை தனது ஆடுகளுடன் சேர்க்க அவர் கேட்டதினால் அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார். நிச்சயமாக பங்காளிகளில் அதிகமானவர்கள் - அவர்களில் சிலர் சிலர் மீது அநீதி இழைக்கின்றனர். (ஆனால்,) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களைத் தவிர. அவர்கள் மிகக் குறைவானவர்களே! தாவூத், நாம் அவரை சோதித்தோம் என்பதை அறிந்தார். ஆகவே, அவர் தன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். சிரம் பணிந்தவராக (பூமியில்) விழுந்தார். அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَغَفَرْنَا لَهُۥ ذَٰلِكَ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَـَٔابٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவருக்கு அதை (அந்த தவறை) மன்னித்தருளினோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடம் மிக நெருக்கமும் அழகிய மீளுமிடமும் உண்டு.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنَٰكَ خَلِيفَةً فِى ٱلْأَرْضِ فَٱحْكُم بَيْنَ ٱلنَّاسِ بِٱلْحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌۢ بِمَا نَسُوا۟ يَوْمَ ٱلْحِسَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாவூதே! நிச்சயமாக நாம் உம்மை இந்த பூமியில் அதிபராக ஆக்கினோம். ஆகவே, மக்களுக்கு மத்தியில் சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! மன ஆசையை பின்பற்றிவிடாதீர். அது உம்மை அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து வழிகெடுத்துவிடும். நிச்சயமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து வழிகெடுபவர்கள் - அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு, அவர்கள் விசாரணை நாளை மறந்ததால்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَا خَلَقْنَا ٱلسَّمَآءَ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَٰطِلًا ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِنَ ٱلنَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானத்தையும் பூமியையும் அவ்விரண்டுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நாம் வீணாக படைக்கவில்லை. அது நிராகரிப்பவர்களின் எண்ணமாகும். நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் நாசம் உண்டாகட்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَمْ نَجْعَلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ كَٱلْمُفْسِدِينَ فِى ٱلْأَرْضِ أَمْ نَجْعَلُ ٱلْمُتَّقِينَ كَٱلْفُجَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களை பூமியில் குழப்பம் செய்பவர்களைப் போன்று ஆக்குவோமா? இறையச்சம் உள்ளவர்களை பாவிகளைப் போன்று ஆக்குவோமா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كِتَٰبٌ أَنزَلْنَٰهُ إِلَيْكَ مُبَٰرَكٌ لِّيَدَّبَّرُوٓا۟ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது அருள் நிறைந்த ஒரு வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுள்ளவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை நாம் உமக்கு இறக்கினோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَوَهَبْنَا لِدَاوُۥدَ سُلَيْمَٰنَ نِعْمَ ٱلْعَبْدُ إِنَّهُۥٓ أَوَّابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாவூதுக்கு நாம் ஸுலைமானை (பிள்ளையாக) வழங்கினோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர் ஆவார். (அல்லாஹ்வை அதிகம் நினைப்பவராகவும் தொழுபவராகவும் அவனுக்கு அதிகம் கீழ்ப்படிபவராகவும் ஆவார்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِذْ عُرِضَ عَلَيْهِ بِٱلْعَشِىِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلْجِيَادُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஓடும்போது) விரைந்து ஓடக்கூடிய, (நிற்கும்போது மூன்று கால்களின் மீது நின்று, ஒரு காலின் குழம்பை பூமியில் தொட்டு) அமைதியாக நிற்கக்கூடிய குதிரைகள் மாலை நேரத்தில் அவருக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டபோது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَقَالَ إِنِّىٓ أَحْبَبْتُ حُبَّ ٱلْخَيْرِ عَن ذِكْرِ رَبِّى حَتَّىٰ تَوَارَتْ بِٱلْحِجَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவர் கூறினார்: “என் இறைவனை தொழுவதை விட்டும் (மறக்கும் அளவுக்கு குதிரை) செல்வத்தின் ஆசையை நிச்சயமாக நான் ஆசை வைத்து விட்டேன்.” இறுதியாக, (சூரியன் அது மறையக்கூடிய) திரையில் மறைந்து (-பார்க்க முடியாமல் ஆகி) விட்டது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

رُدُّوهَا عَلَىَّ فَطَفِقَ مَسْحًۢا بِٱلسُّوقِ وَٱلْأَعْنَاقِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள். கெண்டை கால்களிலும் கழுத்துகளிலும் அவற்றை (அன்புடன்) தடவ ஆரம்பித்தார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَٰنَ وَأَلْقَيْنَا عَلَىٰ كُرْسِيِّهِۦ جَسَدًا ثُمَّ أَنَابَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸுலைமானை நாம் திட்டவட்டமாக சோதித்தோம். அவருடை நாற்காலியில் ஓர் உடலை போட்டோம். பிறகு அவர் (நம் பக்கம்) திரும்பிவிட்டார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَهَبْ لِى مُلْكًا لَّا يَنۢبَغِى لِأَحَدٍ مِّنۢ بَعْدِىٓ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குப் பிறகு வேறு ஒருவருக்கும் தகுதியாகாத ஓர் ஆட்சியை நீ எனக்குத் தா! நிச்சயமாக நீதான் மகா பெரிய கொடைவள்ளல் ஆவாய்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَسَخَّرْنَا لَهُ ٱلرِّيحَ تَجْرِى بِأَمْرِهِۦ رُخَآءً حَيْثُ أَصَابَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவருக்கு நாம் காற்றை கட்டுப்படுத்திக் கொடுத்தோம். அவர் விரும்புகின்ற இடத்திற்கு அவருடைய கட்டளைக்கிணங்க அது மென்மையாக வீசும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٍ وَغَوَّاصٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், எல்லா ஷைத்தான்களையும் (அவருக்கு பணிய வைத்தோம்). அவர்களில் கட்டிட வல்லுனர்கள், முத்துக் குளிப்பவர்கள் இருந்தனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِى ٱلْأَصْفَادِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவர்கள் அனைவரையும்,) இன்னும், சங்கிலிகளில் பிணைக்கப்பட்ட மற்றவர்களையும் (நாம் அவருக்கு பணிய வைத்தோம்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَٰذَا عَطَآؤُنَا فَٱمْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது நமது அருட்கொடையாகும். ஆகவே, (இந்த அருளை பிறருக்கு) நீர் கொடுப்பீராக! அல்லது, நீரே வைத்துக்கொள்வீராக! (அது விஷயமாக உம்மிடம்) விசாரணை இருக்காது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَـَٔابٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவருக்கு நம்மிடம் நெருக்கமும் அழகிய மீளுமிடமும் இருக்கிறது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱذْكُرْ عَبْدَنَآ أَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلشَّيْطَٰنُ بِنُصْبٍ وَعَذَابٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! நிச்சயமாக எனக்கு களைப்பையும் இன்னும் வலியையும் ஷைத்தான் ஏற்படுத்தி விட்டான் என்று அவர் தன் இறைவனை அழைத்(து பிரார்த்தித்)த போது (நாம் கூறினோம்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱرْكُضْ بِرِجْلِكَ هَٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌ وَشَرَابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது காலால் (பூமியை) அடிப்பீராக! இது குளிக்கின்ற இன்னும் குடிக்கின்ற குளிர்ந்த நீராகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَوَهَبْنَا لَهُۥٓ أَهْلَهُۥ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம் புறத்தில் இருந்து கருணையாகவும் அறிவுள்ளவர்களுக்கு ஓர் உபதேசமாக இருப்பதற்காகவும் அவருக்கு அவருடைய குடும்பத்தாரையும் அவர்களுடன் (குணத்திலும் அழகிலும்) அவர்கள் போன்றவர்களையும் நாம் (அதிகமாகக்) கொடுத்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَٱضْرِب بِّهِۦ وَلَا تَحْنَثْ إِنَّا وَجَدْنَٰهُ صَابِرًا نِّعْمَ ٱلْعَبْدُ إِنَّهُۥٓ أَوَّابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது கரத்தால் ஒரு பிடி புல்லை எடுப்பீராக! அதன்மூலம் அடிப்பீராக! நீர் சத்தியத்தை முறிக்காதீர்! நிச்சயமாக நாம் அவரை பொறுமையாளராக கண்டோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர் ஆவார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱذْكُرْ عِبَٰدَنَآ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ أُو۟لِى ٱلْأَيْدِى وَٱلْأَبْصَٰرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநமது அடியார்களான, பலமும் அகப்பார்வையும் உடையவர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரை நினைவு கூர்வீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّآ أَخْلَصْنَٰهُم بِخَالِصَةٍ ذِكْرَى ٱلدَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் “மறுமையை அதிகம் நினைத்தல் (அதற்காக அமல் செய்தல்)” என்ற சிறப்பைக் கொண்டு அவர்களை (விசேஷமாக) தேர்ந்தெடுத்தோம். (அவர்களும் அல்லாஹ்வை, மறுமையை நினைவு கூர்ந்தவர்களாக இருந்ததுடன் மக்களுக்கும் அதை நினைவூட்டுபவர்களாக இருந்தார்கள்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِنَّهُمْ عِندَنَا لَمِنَ ٱلْمُصْطَفَيْنَ ٱلْأَخْيَارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், நிச்சயமாக அவர்கள், நம்மிடம் மிகச் சிறந்தவர்களான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱذْكُرْ إِسْمَٰعِيلَ وَٱلْيَسَعَ وَذَا ٱلْكِفْلِ وَكُلٌّ مِّنَ ٱلْأَخْيَارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், இஸ்மாயீலையும் அல்யசவுவையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَٰذَا ذِكْرٌ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَـَٔابٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது ஒரு நினைவூட்டல் (நல்லுபதேசம்) ஆகும். நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு அழகிய மீளுமிடம் (தங்குமிடம்) இருக்கிறது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

جَنَّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ ٱلْأَبْوَٰبُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅத்ன் சொர்க்கங்கள் (அவர்களுக்கு) உண்டு. (அவற்றின்) வாசல்கள் அவர்களுக்காக திறக்கப்பட்டவையாக இருக்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مُتَّكِـِٔينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَٰكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றில் அவர்கள் (-கட்டில்கள் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதிகமான பழங்களையும் பானங்களையும் கொண்டுவரும்படி (கூறி தங்கள் பணியாளர்களை) அழைப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ أَتْرَابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், சம வயதுடைய, பார்வைகளை தாழ்த்திய பெண்கள் அவர்களிடம் இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوْمِ ٱلْحِسَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவிசாரணை நாளில் (நீங்கள் பெறுவீர்கள் என்று) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவை இவைதான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ هَٰذَا لَرِزْقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இவை (சொர்க்கவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட) நமது கொடையாகும். இவற்றுக்கு அழிவு, முடிவு அறவே இல்லை. (அல்லாஹ்வின் சொர்க்க அருள்கள் தீர்ந்து போகாதவை.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَٰذَا وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(மேற்கூறப்பட்ட) இவை (நல்லவர்களுக்கு உரியதாகும்). ஆனால், நிச்சயமாக எல்லை மீறியவர்களுக்கு (-பாவிகளுக்கு) மிகக் கெட்ட மீளுமிடம்தான் உண்டு.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

جَهَنَّمَ يَصْلَوْنَهَا فَبِئْسَ ٱلْمِهَادُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அதுதான்) நரகம், அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். (அங்கே அவர்களுக்கு விரிப்பு இருக்கும்.) அந்த விரிப்பு (நெருப்பினால் ஆன) மிகக் கெட்ட விரிப்பாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَٰذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவை, கொதி நீர் மற்றும் சீழ் ஆகும். ஆக, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَءَاخَرُ مِن شَكْلِهِۦٓ أَزْوَٰجٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அதனுடைய தோற்றத்தில் பல வகையான வேறு தண்டனைகளும் (அவர்களுக்கு) உண்டு.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هَٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْ لَا مَرْحَبًۢا بِهِمْ إِنَّهُمْ صَالُوا۟ ٱلنَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது உங்களுடன் (நரகத்தில்) நுழையக்கூடிய (இன்னொரு) கூட்டமாகும் (என்று பாவிகளின் தலைவர்களுக்கு கூறப்படும். அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்:) “அவர்களுக்கு (இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும். நிச்சயமாக அவர்கள் நரகத்தில் எரிந்து பொசுங்குவார்கள்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالُوا۟ بَلْ أَنتُمْ لَا مَرْحَبًۢا بِكُمْ أَنتُمْ قَدَّمْتُمُوهُ لَنَا فَبِئْسَ ٱلْقَرَارُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(பாவிகள்) கூறுவார்கள்: மாறாக, நீங்கள்தான் (நாங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தீர்கள்). உங்களுக்கு இங்கு வசதி கிடைக்காமல் போகட்டும். நீங்கள்தான் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினீர்கள். (எங்கள் பாவங்களுக்கு நீங்கள்தான் காரணம்.) தங்குமிடங்களில் நரகம் மிகக் கெட்ட இடமாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالُوا۟ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِى ٱلنَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (பாவிகள்) கூறுவார்கள்: எங்கள் இறைவா! யார் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினாரோ (-எங்களை யார் பாவத்தில் தள்ளினாரோ) அவருக்கு நரகத்தில் இரண்டு மடங்கு வேதனையை நீ அதிகப்படுத்து.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَقَالُوا۟ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالًا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلْأَشْرَارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் கூறுவார்கள்: “கெட்டவர்களில் உள்ளவர்கள் என்று நாங்கள் கருதி வந்த பல மனிதர்களை எங்களால் (இங்கு நரகத்தில்) பார்க்க முடிவதில்லையே!”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَتَّخَذْنَٰهُمْ سِخْرِيًّا أَمْ زَاغَتْ عَنْهُمُ ٱلْأَبْصَٰرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நரகத்தில் நுழையாத) அ(ந்த நல்ல)வர்களை நாங்கள் கேலியாக எடுத்துக் கொண்டோமா? அல்லது, (அவர்கள் இங்கு இருந்தும் அவர்களை நாங்கள் தேடியும் எங்கள்) பார்வைகள் அவர்களைப் பார்க்க முடியாமல் சோர்ந்து விட்டனவா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ذَٰلِكَ لَحَقٌّ تَخَاصُمُ أَهْلِ ٱلنَّارِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநரகவாசிகள் (இவ்வாறு) தங்களுக்குள் தர்க்கிப்பது - நிச்சயமாக இது உண்மையாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قُلْ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٌ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நான் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். ஒரே ஒருவனுமாகிய (அனைவரையும்) அடக்கி ஆளுகிறவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் யாரும் இல்லை.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلْعَزِيزُ ٱلْغَفَّٰرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான், அவன் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قُلْ هُوَ نَبَؤٌا۟ عَظِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! இ(ந்த வேதமான)து ஒரு மகத்தான செய்தியாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَنتُمْ عَنْهُ مُعْرِضُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் இதை புறக்கணிக்கிறீர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَا كَانَ لِىَ مِنْ عِلْمٍۭ بِٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰٓ إِذْ يَخْتَصِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமிக உயர்ந்த வானவர்களைப் பற்றி, (ஆதமை அல்லாஹ் படைப்பதற்கு முன்னர் அவர் விஷயமாக) அவர்கள் தர்க்கித்த போது (என்ன கூறினார்கள் என்று) எனக்கு அறவே ஞானம் இல்லை. (அல்லாஹ் எனக்கு அதை கூறிய பின்னர்தான் நான் அதை அறிவேன். ஆகவே, இது தெளிவான ஓர் ஆதாரமாக இல்லையா?)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِن يُوحَىٰٓ إِلَىَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٌ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக நான் எல்லாம் தெளிவான ஓர் எச்சரிப்பாளர்தான்” என்றே தவிர எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى خَٰلِقٌۢ بَشَرًا مِّن طِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அந்த சமயத்தை நினைவு கூர்வீராக, உமது இறைவன் வானவர்களை நோக்கி கூறினான்: “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை படைக்கப்போகிறேன்”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَٰجِدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஆக, நான் அவரை செம்மைபடுத்தி, அவரில் நான் படைத்த உயிரை ஊதினால் (வானவர்களே!) நீங்கள் அவருக்கு முன் சிரம் பணிந்தவர்களாக விழுந்து விடுங்கள்!”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَسَجَدَ ٱلْمَلَٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, வானவர்கள், அவர்கள் ஒவ்வொருவரும், அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَّآ إِبْلِيسَ ٱسْتَكْبَرَ وَكَانَ مِنَ ٱلْكَٰفِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்லீஸைத் தவிர. அவன் பெருமை அடித்தான். இன்னும், நிராகரிப்பவர்களில் ஆகிவிட்டான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ يَٰٓإِبْلِيسُ مَا مَنَعَكَ أَن تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ أَسْتَكْبَرْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْعَالِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்) கூறினான்: “இப்லீஸே! நான் எனது இரு கரத்தால் படைத்தவருக்கு நீ ஸஜ்தா செய்வதிலிருந்து உன்னை தடுத்தது எது? நீ பெருமையடிக்கிறாயா? (இதற்கு முன் நீ பெருமையடித்ததில்லையே!) அல்லது, (இதற்கு முன்னரும்) நீ பெருமையடிப்பவர்களில்தான் இருந்தாயா?”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ أَنَا۠ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِى مِن نَّارٍ وَخَلَقْتَهُۥ مِن طِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஷைத்தான்) கூறினான்: “நான் அவரை விட சிறந்தவன். நீ என்னை நெருப்பில் இருந்து படைத்தாய். இன்னும், அவரை களி மண்ணிலிருந்து படைத்தாய்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ فَٱخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்) கூறினான்: “நீ இ(ந்த சொர்க்கத்)திலிருந்து வெளியேறி விடு! ஆக, நிச்சயமாக நீ சபிக்கப்பட்டவன் ஆவாய்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِىٓ إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“இன்னும், நிச்சயமாக கூலி (கொடுக்கப்படும் மறுமை) நாள் வரை உன் மீது என் சாபம் உண்டாகட்டும்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ رَبِّ فَأَنظِرْنِىٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! ஆக, அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை எனக்கு அவகாசம் அளி!”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ, அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருப்பாய்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَىٰ يَوْمِ ٱلْوَقْتِ ٱلْمَعْلُومِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“(மறுமைக்கான) அறியப்பட்ட நேரத்தின் நாள் வரும் வரை (உனக்கு அவகாசம் அளிக்கப்படும்).”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இப்லீஸ்) கூறினான்: “ஆக, உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நான் வழிகெடுப்பேன்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“அவர்களில் உனது பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்களை வழிகெடுக்க என்னால் முடியாது.)”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالَ فَٱلْحَقُّ وَٱلْحَقَّ أَقُولُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்) கூறினான்: “ஆக, (இதுதான் என்னிடமிருந்து வந்த) உண்மையாகும். நான் உண்மையைத்தான் கூறுவேன்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“உன்னாலும் அவர்களில் உன்னை பின்பற்றியவர்களாலும் (உங்கள்) அனைவர்களாலும் நரகத்தை நிரப்புவேன்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُتَكَلِّفِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! “இதற்காக நான் உங்களிடம் கூலி எதையும் கேட்கவில்லை. இன்னும், நான் (பொய்யாக) வரட்டு கௌரவம் தேடுபவர்களில் இல்லை.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(குர்ஆனாகிய) இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَتَعْلَمُنَّ نَبَأَهُۥ بَعْدَ حِينٍۭ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதன் செய்தியை (அது உண்மையானது என்று வெளிப்படையாக) சில காலத்திற்குப் பின்னர் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70