فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ إِنَّا خَلَقْنَٰهُم مِّن طِينٍ لَّازِبٍۭ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-மறுமையை மறுப்பவர்கள்) படைப்பால் பலமிக்கவர்களா அல்லது எவர்களை நாம் படைத்தோமோ (அவர்கள் பலமிக்கவர்களா? அதாவது வானம், பூமி, மலைகள், வானவர்கள் போன்ற படைப்புகளா)? என்று அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.
Tamil Translation - Omar Sharifஆக, (மறுமையை மறுக்கின்ற) அவர்கள் படைப்பால் பலமிக்கவர்களா? அல்லது, (வானம் பூமி, வானவர்கள் போன்ற) நமது படைப்புகளா? என்று அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. (நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவற்றைப் படைப்பது சிரமமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கிறோம்.