فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ قَالَ يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்தபோது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” (மகனார்) கூறினார்: “என் தந்தையே! உமக்கு எது ஏவப்படுகிறதோ அதை நீர் நிறைவேற்றுவீராக! இன் ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது) பொறுமையாக இருப்பவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.”
Tamil Translation - Omar Sharifஆக, (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்தபோது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” (மகனார்) கூறினார்: “என் தந்தையே! உமக்கு எது ஏவப்படுகிறதோ அதை நீர் நிறைவேற்றுவீராக! இன் ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது) பொறுமையாக இருப்பவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi102. (அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார்.