caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muddaththir அத்தியாயம் المدثر

56 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 4

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபோர்வை போர்த்தியவரே!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قُمْ فَأَنذِرْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎழுவீராக! எச்சரிப்பீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَرَبَّكَ فَكَبِّرْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَثِيَابَكَ فَطَهِّرْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது ஆடையை சுத்தப்படுத்துவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلرُّجْزَ فَٱهْجُرْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசிலைகளை விட்டு விலகுவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(உமது அமல்களை) நீர் பெரிதாக கருதி, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلِرَبِّكَ فَٱصْبِرْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎக்காளத்தில் ஊதப்பட்டால்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَلَى ٱلْكَٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது நிராகரிப்பாளர்களுக்கு இலகுவானதல்ல.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றில்) படைத்தேனோ அவனையும் விட்டு விடுவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَبَنِينَ شُهُودًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவனுடன் எப்போதும்) ஆஜராகி இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை (நான் அவனுக்கு கொடுத்தேன்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு மிகுந்த வசதிகளை ஏற்படுத்தினேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّآ إِنَّهُۥ كَانَ لِـَٔايَٰتِنَا عَنِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல. நிச்சயமாக அவன் நமது வசனங்களுக்கு முரண்படக் கூடியவனாக (அவற்றை மறுப்பவனாக, அவற்றை மீறுபவனாக) இருந்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

سَأُرْهِقُهُۥ صَعُودًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவிரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன் யோசித்தான். இன்னும் திட்டமிட்டான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَقُتِلَ كَيْفَ قَدَّرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ نَظَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவன் தாமதித்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ عَبَسَ وَبَسَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, முகம் சுளித்தான். இன்னும், கடுகடுத்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவன் புறக்கணித்தான்; பெருமையடித்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَقَالَ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் கூறினான்: இது (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنْ هَٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது மனிதர்களின் சொல்லே தவிர (வேறு) இல்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

سَأُصْلِيهِ سَقَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஸகர்”நரகத்தில் அவனை நான் விரைவில் பொசுக்குவேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸகர் என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَا تُبْقِى وَلَا تَذَرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (தன்னில் யாரையும்) வாழவைக்காது, (செத்துவிடுவதற்கும் யாரையும்) விட்டுவிடாது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَوَّاحَةٌ لِّلْبَشَرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது தோல்களை கரித்துவிடும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَا جَعَلْنَآ أَصْحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةً وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَٰنًا وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْمُؤْمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًا كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநரகத்தின் காவலாளிகளை வானவர்களாகவே தவிர (வேறு யாரையும்) நாம் ஆக்கவில்லை. நிராகரித்தவர்களுக்கு ஒரு குழப்பமாகவே தவிர அவர்களின் எண்ணிக்கையை நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதை) உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பிக்கையால் அதிகரிப்பதற்காகவும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகின்றான் என்று கூறுவதற்காகவும் (அவர்களின் எண்ணிக்கையை நாம் பத்தொன்பதாக ஆக்கினோம்). இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கின்றான்; தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகின்றான். உமது இறைவனின் இராணுவங்களை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார்கள். இது (-நரகம்) மனிதர்களுக்கு ஒரு நினைவூட்டலே தவிர (வேறு) இல்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّا وَٱلْقَمَرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிகாலை மீது சத்தியமாக, அது ஒளி வீசும் போது!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அது (-நரகம்) மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

نَذِيرًا لِّلْبَشَرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (-நரகம்) மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் யார் (வழிபாட்டில்) முன்னேறுவதற்கு நாடினாரோ அவருக்கு அல்லது (நன்மையில்) பின் தங்கி (பாவத்தில் இருந்து) விடுவதற்கு நாடினாரோ அவருக்கு (இந்த நரகம் எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கும்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்ததற்காக பிடிக்கப்படும். (-விசாரிக்கப்பட்டு செயலுக்கு தகுந்த கூலி அதற்கு கொடுக்கப்படும்)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فِى جَنَّٰتٍ يَتَسَآءَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

عَنِ ٱلْمُجْرِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபாவிகளைப் பற்றி.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَا سَلَكَكُمْ فِى سَقَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(பாவிகளே) உங்களை ஸகர் நரகத்தில் நுழைத்தது எது?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: “தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாக நாங்கள் இருக்கவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவீணான காரியங்களில் ஈடுபடுவோருடன் சேர்ந்து நாங்கள் வீணான காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூலி (கொடுக்கப்படும்) நாளை பொய்ப்பிப்பவர்களாக நாங்கள் இருந்தோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَمَا تَنفَعُهُمْ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை அவர்களுக்கு பலனளிக்காது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதப்பித்து ஓடுகிற பயந்துபோன கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கிறார்கள்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவை (வேட்டையாடுவதற்காக பாய்ந்து வருகிற) சிங்கத்திடமிருந்து விரண்டோடுகின்றன.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட ஏடுகள் தனக்கு தரப்பட வேண்டும் என்று நாடுகின்றனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّا بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல. (-அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.) மாறாக, அவர்கள் மறுமையை பயப்படுவதில்லை. (ஆகவேதான், அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல. (-இந்த குர்ஆன் சூனியமும் அல்ல, மனிதர்களின் கூற்றும் அல்ல. மாறாக,) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, யார் நாடுவாரோ இதன் மூலம் அவர் உபதேசம் பெறுவார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள். அவன்தான் (படைப்புகள் அவனை) அஞ்சுவதற்கும் (படைப்புகளை அவன்) மன்னிப்பதற்கும் மிகத் தகுதியானவன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70