முகப்பு › அத்தியாயங்கள் › Al-Qiyaama அத்தியாயம்
Al-Qiyaama அத்தியாயம் القيامة
40 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 31
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மனிதன் எண்ணுகிறானா, அவனுடைய எலும்புகளை - (அவை உக்கிப்போன பின்னர்) - அறவே நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் (-அது நமக்கு முடியாது) என்று?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஏன் முடியாது! அவனுடைய விரல்களை (அவை பிரிந்தில்லாமல், ஒட்டகத்தின் குளம்பைப் போல் ஒன்றோடு ஒன்று சேர்ந்த நிலையில்) சமமாக ஆக்கிவிடுவதற்கு நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கிறோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَخَسَفَ ٱلْقَمَرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே?”
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَلَّا لَا وَزَرَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவ்வாறல்ல! தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மனிதன் அந்நாளில், தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இ(தை ஓதுவ)தற்கு உமது நாவை அசைக்காதீர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் (பிறகு) அதை (நீர்) ஓதும்படி செய்வதும் நம்மீது கடமையாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்ப்பீராக!)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவ்வாறல்ல, (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை நேசிக்கிறீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக) இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அறிந்துகொள்ளும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவ்வாறல்ல! (-தங்களின் இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்று இணைவைப்பவர்கள் எண்ணுவது போல் அல்ல. பாவியின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَقِيلَ مَنْ رَاقٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஓதிப்பார்ப்பவர் யாரும் இருக்கின்றாரா என்று கேட்கப்பட்டால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக இது (உலகை விட்டு நாம் பிரியப் போகின்ற) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (மறுமையின்) கெண்டைக் காலுடன் (உலகத்தின்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகும், உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى
Tamil Translation - Omar Sharif - Abridged Version மனிதன் தான் சும்மா விட்டுவிடப்படுவான் என்று எண்ணுகின்றானா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். அவன்(தான்) (அவனைப்) படைத்தான், இன்னும் செம்மையாக ஆக்கினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதிலிருந்து ஆண், பெண் ஜோடிகளை அவன்தான் ஆக்கினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இ(த்தகைய)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவனாக இல்லையா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
← Al-Muddaththir அத்தியாயம்
Al-Insaan அத்தியாயம் →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→
அரபு மூலமும் மொழிபெயர்ப்புகளும் Tanzil மற்றும் QuranEnc வழியாக — சொல்லுக்குச் சொல், மாற்றப்படாமல் · மொழிபெயர்ப்புகள் அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரியவை; குர்ஆன் அல்ல
இது ஓர் ஆய்வு உதவியாகும்; மார்க்கத் தீர்ப்பின் ஆதாரம் அல்ல.