Tamil Translation - Omar Sharif - Abridged Version(வணக்க வழிபாட்டுக்காக) இரவில் எழுந்து தொழுவீராக, (இரவில்) குறைந்த நேரத்தைத் தவிர! (அந்த குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பீராக!)
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் (-இரவின்) பாதியில் எழு(ந்து தொழு)வீராக! அல்லது அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!)
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இரவு (நேர) வணக்கம் அதுதான் மிகவும் வலுவான தாக்கமுடையதும் அறிவுரையால் மிகத் தெளிவானதும் ஆகும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக பகலில் உமக்கு நீண்ட ஓய்வு இருக்கிறது. (அதில் உமது உலகத் தேவைகளையும் உறக்கத்தையும் நீர் நிறைவேற்றலாம்.)
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனின் பெயரை நினைவு கூர்(ந்து அவனை அழைத்து, பிரார்த்தித்து வணங்கு)வீராக! இன்னும் அவன் பக்கம் முற்றிலும் நீர் ஒதுங்கிவிடுவீராக!
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் கிழக்கு இன்னும் மேற்கின் இறைவன் ஆவான். அவனைத் தவிர (உண்மையில்) வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. ஆகவே, அவனையே (உமக்கு) பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்வீராக!
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமியும் மலைகளும் குலுங்குகின்ற நாளில் (அவர்களுக்கு அந்த வேதனைகள் உண்டு. அந்நாளில்) மலைகள் தூவப்படுகின்ற மணலாக ஆகிவிடும்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் உங்களைப் பற்றி (யார் நம்பிக்கை கொண்டார், யார் நிராகரித்தார் என்று என்னிடம்) சாட்சி கூறுகின்ற ஒரு தூதரை உங்களிடம் அனுப்பினோம், ஃபிர்அவ்னுக்கு ஒரு தூதரை நாம் அனுப்பியது போன்று.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஃபிர்அவ்ன் அந்த தூதருக்கு மாறுசெய்தான். ஆகவே, தாங்கிக்கொள்ள முடியாத (தண்டனையின்) பிடியால் நாம் அவனை பிடித்தோம்.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானம் அ(ன்றைய தினத்)தில் (துண்டு துண்டாக தெரித்து) பிளந்து விடும். அவனது வாக்கு கண்டிப்பாக நிறைவேறக்கூடியதாக இருக்கிறது.
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். ஆகவே, யார் நாடுகின்றாரோ அவர் தன் இறைவன் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும் (அவனை நம்பிக்கை கொண்டு வணக்க வழிபாடுகளை செய்யட்டும்).
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும் உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்” என்று. அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கின்றான். நீங்கள் அதற்கு (இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள், இன்னும் மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள், இன்னும் மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அதிலிருந்து (குர்ஆனிலிருந்து உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.