முகப்பு › அத்தியாயங்கள் › Al-Waaqia அத்தியாயம்
Al-Waaqia அத்தியாயம் الواقعة
96 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிகழக்கூடிய மறுமை நிகழ்ந்து விட்டால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
خَافِضَةٌ رَّافِعَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அது பாவிகளை நரகத்தில்) தாழ்த்தக்கூடியது. (நல்லவர்களை சொர்க்கத்தில்) உயர்த்தக்கூடியது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version பூமி பலமாக குலுக்கப்பட்டால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version பரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் அவை ஆகிவிடும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَٰثَةً
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்கள் மூன்று வகையினராக ஆகிவிடு வீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்! அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள் யார்?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்! துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (உலகில் நன்மையில்) முந்தியவர்கள்தான் (மறுமையில் சொர்க்கப் பதவிகளில்) முந்தியவர்கள் ஆவர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் (அல்லாஹ்வின் அருகில்) மிக நெருக்கமானவர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “நயீம்” இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version முந்தியவர்களில் அதிகமானவர்கள் (அதில் நுழைவார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் மீது நிரந்தரமான சிறுவர்கள் சுற்றி வருவார்கள்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version குவளைகளுடனும் கூஜாக்களுடனும் தூய்மையான மது நிறைந்த கிண்ணங்களுடனும் (சுற்றி வருவார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதனால் அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَفَٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற பழங்களுடனும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின் பறவை மாமிசங்களுடனும் (அந்த சிறுவர்கள் சுற்றுவார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَحُورٌ عِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், வெள்ளை நிறமான கண்ணழகிகளான வெண்மையான கன்னிகள் (அவர்களுக்கு மனைவிகளாக இருப்பார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அந்த அழகிகள்) பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல் (இருப்பார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு கூலியாக (இந்த அருள்கள் அவர்களுக்கு கிடைக்கும்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதில் அவர்கள் வீண் பேச்சுகளையும் பாவமான பேச்சுகளையும் செவியுற மாட்டார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا قِيلًا سَلَٰمًا سَلَٰمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஸலாம், ஸலாம் என்ற பேச்சைத் தவிர (வேறு பேச்சை செவியுற மாட்டார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version வலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِى سِدْرٍ مَّخْضُودٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் முட்கள் நீக்கப்பட்ட இலந்தை மரங்களின் அருகிலும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَطَلْحٍ مَّنضُودٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version குலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகிலும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَظِلٍّ مَّمْدُودٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்காத நிழல்களிலும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَآءٍ مَّسْكُوبٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகிலும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَفَٰكِهَةٍ كَثِيرَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதிகமான பழங்களுக்கு அருகிலும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version தீர்ந்துவிடாத, தடுக்கப்படாத (பழங்களுக்கு அருகிலும்),
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உயர்வான விரிப்புகளிலும் (இருப்பார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءً
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களை (-சொர்க்க கன்னிகளை) நிச்சயமாக நாம் முற்றிலும் புதிதாகவே உருவாக்குவோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களை நாம் (எப்போதும்) கன்னிப் பெண்களாக ஆக்குவோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
عُرُبًا أَتْرَابًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version கணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக ஆக்குவோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version வலப் பக்கமுடையவர்களுக்காக (நாம் அவர்களை படைத்திருக்கின்றோம்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (வலப் பக்கமுடையவர்கள்) முன்னோரிலும் அதிகமானவர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் பின்னோரிலும் அதிகமானவர்கள் ஆவர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இடப்பக்கமுடையவர்கள்! இடப்பக்கமுடையவர்கள் யார்?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِى سَمُومٍ وَحَمِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version கடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَظِلٍّ مِّن يَحْمُومٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version கரும் புகையின் நிழலிலும் (அவர்கள் இருப்பார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (இளைப்பாறுவதற்கு ஏதுவாக அந்த புகை) குளிர்ந்திருக்காது, (நுகர்வதற்குத் தோதுவாக) நறுமணம் உடையதாகவும் இருக்காது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் (உலகத்தில்) சுகவாசிகளாக இருந்தனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பெரும் பாவத்தின் மீது பிடிவாதம் பிடித்தவர்களாக இருந்தனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “நாங்கள் இறந்துவிட்டால், மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக (இந்த நிலைக்கு நாங்கள் மாறிய பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து) நாங்கள் எழுப்பப்படுவோமா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version முன்னோர்களான எங்கள் மூதாதைகளுமா (எங்களுடன் எழுப்பப்படுவார்கள்)?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக முன்னோரும் பின்னோரும்
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍ مَّعْلُومٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அல்லாஹ்விடம்) அறியப்பட்ட (மறுமை) நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, பொய்ப்பிக்கின்ற வழிகேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “ஸக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதில் இருந்து வயிறுகளை நிரப்புவீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதற்கு மேலாக கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை குடிப்பீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version தாகித்த ஒட்டகங்கள் குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இதுதான் கூலி நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நாம்தான் உங்களைப் படைத்தோம். நீங்கள் (இறந்த பின்னர் மீண்டும் எழுப்பப்படுவதை) உண்மை என நம்பமாட்டீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்கள் (உங்கள் மனைவிகளின் கருவறையில்) செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி அறிவியுங்கள்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதை (-அந்த இந்திரியத்தையும் அதில் இருந்து உருவாகுகின்ற குழந்தையையும்) நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் (அதை) படைப்பவர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நாம்தான் உங்களுக்கு மத்தியில் மரணத்தை (அது யாருக்கு, எப்போது வரும் என்று) நிர்ணயித்தோம். இன்னும் நாங்கள் இயலாதவர்கள் இல்லை,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்கள் உருவங்களை மாற்றுவதற்கும், நீங்கள் அறியாத ஒன்றில் (-புதிய ஓர் உருவத்தில்) உங்களை உருவாக்கிவிடுவதற்கும் (நாங்கள் இயலாதவர்கள் இல்லை).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version முதல் முறை படைத்திருப்பதை (அதை செய்தவன் யார் என்பதை) நீங்கள் திட்டவட்டமாக அறிந்தீர்கள். (இதன் மூலம்) நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்கள் (பூமியில்) உழு(து பயிரிடு)கின்றீர்களே அதைப் பற்றி அறிவியுங்கள்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் முளைக்க வைக்கின்றோமா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நாம் நாடினால் அதை குப்பையாக (அதைப் போன்று) ஆக்கிவிடுவோம். நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக ஆகி இருப்பீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّا لَمُغْرَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்” (என்றும்)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “மாறாக, நாங்கள் பெரும் இழப்புக்குள்ளானவர்கள்” (என்றும் அப்போது நீங்கள் கூறுவீர்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதை கார்மேகத்தில் இருந்து நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை மேகத்தில் இருந்து) இறக்குகின்றவர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நாம் நாடினால் அதை உப்பு நீராக ஆக்கிவிடுவோம். நீங்கள் (இந்த மா பெரும் அருட்கொடைக்காக இறைவனுக்கு) நன்றிசெலுத்த வேண்டாமா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்கள் தீ மூட்டுகின்ற நெருப்பைப் பற்றி அறிவியுங்கள்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதன் மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை) உருவாக்குகின்றோமா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةً وَمَتَٰعًا لِّلْمُقْوِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நாம் அதை (-அந்த உலக நெருப்பை மறுமையின் நரக நெருப்பைப் பற்றி உங்களுக்கு) ஒரு நினைவூட்டலாகவும் பயணிகளுக்கு ஒரு பலனாகவும் ஆக்கினோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (தெற்கு திசையில்) நட்சத்திரங்கள் விழுகின்ற (-மறைகின்ற) இடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்கள் அறிந்து கொண்டால் நிச்சயமாக இது மாபெரும் சத்தியமாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக இது கண்ணியமான குர்ஆனாகும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِى كِتَٰبٍ مَّكْنُونٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர (மற்றவர்கள்) இதைத் தொடமாட்டார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இந்த பேச்சை (-குர்ஆனை) நீங்கள் அலட்சியம் செய்(து இதில் உள்ள உண்மை அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பிக்)கின்றீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நீங்கள் (இதை) பொய்ப்பிப்பதையே (அல்லாஹ் உங்கள் மீது செய்த அருள்களுக்கு) உங்கள் நன்றியாக ஆக்கிக் கொண்டீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (மரணிப்பவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்கள் அந்நேரத்தில் (அவருக்கு அருகில் இருந்து கொண்டு அவரது நிலையை உங்கள் கண்களால்) பார்க்கிறீர்கள். (ஆனாலும் உங்களால் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நாம் (-நமது வானவர்கள்) உங்களை விட அவருக்கு மிக அருகில் இருக்கின்றோம். என்றாலும் நீங்கள் பார்க்க முடியாது. (உயிரை வாங்கும் போது வானவர்கள் அருகில் இருந்தும் அவர்களை மனிதர்களால் பார்க்க முடியாது.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அந்த உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதை (-அந்த உயிரை) நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமே?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (மரணித்தவர் அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களில் (ஒருவராக) இருந்தால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அவருக்கு மறுமையில்) இறையருளும் (நல்ல) உணவும் “நயீம்” என்ற இன்பம் நிறைந்த சொர்க்கமும் உண்டு.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (இறந்தவர்) வலப்பக்கம் உடையவர்களில் (ஒருவராக) இருந்தால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَسَلَٰمٌ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (ஓ நல்லவரே!) வலப்பக்கம் உடையவர்களில் உள்ள உமக்கு ஸலாம் உண்டாகட்டும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (இறந்த) அவர் வழிகெட்டவர்களான பொய்ப்பித்தவர்களில் (ஒருவராக) இருந்தால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின் விருந்தும்
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَصْلِيَةُ جَحِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கிடைக்கும்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக இதுதான் மிக உறுதியான உண்மையாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
← Ar-Rahmaan அத்தியாயம்
Al-Hadid அத்தியாயம் →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→
அரபு மூலமும் மொழிபெயர்ப்புகளும் Tanzil மற்றும் QuranEnc வழியாக — சொல்லுக்குச் சொல், மாற்றப்படாமல் · மொழிபெயர்ப்புகள் அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரியவை; குர்ஆன் அல்ல
இது ஓர் ஆய்வு உதவியாகும்; மார்க்கத் தீர்ப்பின் ஆதாரம் அல்ல.