لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் நாடினால் அதை குப்பையாக (அதைப் போன்று) ஆக்கிவிடுவோம். நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக ஆகி இருப்பீர்கள்.
Tamil Translation - Omar Sharifநாம் நாடினால் அதை (பயனற்ற) சருகுகளாக (பதருகளாக) ஆக்கிவிடுவோம். (உங்கள் அறுவடைகள் இந்த நிலைக்கு ஆகியதைப் பார்த்து அவை ஏன் இப்படி ஆகின என்று) நீங்கள் ஆச்சரியப்படுபவர்களாக (அல்லது, கவலைப்படுபவர்களாக) ஆகி இருப்பீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi65. நாம் விரும்பினால், அதை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.