caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம் الأحزاب

73 வசனங்கள் · மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ ٱتَّقِ ٱللَّهَ وَلَا تُطِعِ ٱلْكَٰفِرِينَ وَٱلْمُنَٰفِقِينَ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே! அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்! நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக மகா ஞானவானாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱتَّبِعْ مَا يُوحَىٰٓ إِلَيْكَ مِن رَّبِّكَ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதை பின்பற்றுவீராக! நிச்சயமாக நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை சார்ந்திருப்பீராக! அல்லாஹ்வே பொறுப்பாளனாக இருக்க போதுமானவன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَّا جَعَلَ ٱللَّهُ لِرَجُلٍ مِّن قَلْبَيْنِ فِى جَوْفِهِۦ وَمَا جَعَلَ أَزْوَٰجَكُمُ ٱلَّٰٓـِٔى تُظَٰهِرُونَ مِنْهُنَّ أُمَّهَٰتِكُمْ وَمَا جَعَلَ أَدْعِيَآءَكُمْ أَبْنَآءَكُمْ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَٰهِكُمْ وَٱللَّهُ يَقُولُ ٱلْحَقَّ وَهُوَ يَهْدِى ٱلسَّبِيلَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவனது உடலில் இரு உள்ளங்களை அமைக்கவில்லை. நீங்கள் ளிஹார் செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்கள் தாய்மார்களாக அவன் ஆக்கவில்லை. உங்கள் வளர்ப்புப் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அவன் ஆக்கவில்லை. அது உங்கள் வாய்களால் நீங்கள் கூறுவதாகும். அல்லாஹ் உண்மையை கூறுகின்றான். அவன்தான் நல்ல பாதைக்கு வழிகாட்டுகின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱدْعُوهُمْ لِـَٔابَآئِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ ٱللَّهِ فَإِن لَّمْ تَعْلَمُوٓا۟ ءَابَآءَهُمْ فَإِخْوَٰنُكُمْ فِى ٱلدِّينِ وَمَوَٰلِيكُمْ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَآ أَخْطَأْتُم بِهِۦ وَلَٰكِن مَّا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களை அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே) அழையுங்கள்! அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதமானது. நீங்கள் அவர்களின் தந்தைகளை அறியவில்லை என்றால் மார்க்கத்தில் அவர்கள் உங்கள் சகோதரர்கள் (ஆவார்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால். அப்படி இல்லை என்றால்) அவர்கள் உங்கள் உதவியாளர்கள் ஆவார்கள். நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றம் இல்லை. என்றாலும், எதை உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்று செய்ததோ (அதுதான் குற்றம் ஆகும்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلنَّبِىُّ أَوْلَىٰ بِٱلْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَٰجُهُۥٓ أُمَّهَٰتُهُمْ وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍ فِى كِتَٰبِ ٱللَّهِ مِنَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُهَٰجِرِينَ إِلَّآ أَن تَفْعَلُوٓا۟ إِلَىٰٓ أَوْلِيَآئِكُم مَّعْرُوفًا كَانَ ذَٰلِكَ فِى ٱلْكِتَٰبِ مَسْطُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆன்மாக்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். அவருடைய மனைவிமார்கள் அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். இரத்த பந்தங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ற) நம்பிக்கையாளர்களையும் முஹாஜிர்களையும் விட. எனினும், உங்கள் பொறுப்பாளர்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்தால் தவிர. இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கின்றது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذْ أَخَذْنَا مِنَ ٱلنَّبِيِّـۧنَ مِيثَٰقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَى ٱبْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَٰقًا غَلِيظًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎல்லா நபிமார்களிடமும் உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் அவர்களின் ஒப்பந்தத்தை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக. அவர்களிடம் உறுதியான ஒப்பந்தத்தை நாம் வாங்கினோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِّيَسْـَٔلَ ٱلصَّٰدِقِينَ عَن صِدْقِهِمْ وَأَعَدَّ لِلْكَٰفِرِينَ عَذَابًا أَلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉண்மையாளர்களை (-நபிமார்களை) அவர்களின் உண்மையைப் பற்றி (அவர்களின் சமுதாய மக்கள் அவர்களுக்கு என்ன பதில் கூறினர், ஏற்றார்களா, நிராகரித்தார்களா என்று) விசாரிப்பதற்காக (நபிமார்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம்). நிராகரிப்பாளர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை (அல்லாஹ்) ஏற்படுத்தி இருக்கிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ جَآءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَّمْ تَرَوْهَا وَكَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். பல ராணுவங்கள் (உங்களை தாக்குவதற்கு) உங்களிடம் வந்தபோது அவர்களுக்கு எதிராக காற்றையும் நீங்கள் பார்க்காத ராணுவங்களையும் நாம் அனுப்பினோம். அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِذْ جَآءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ ٱلْأَبْصَٰرُ وَبَلَغَتِ ٱلْقُلُوبُ ٱلْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு மேல் புறத்திலிருந்தும் உங்களுக்கு கீழ்ப்புறத்திலிருந்தும் உங்களிடம் அவர்கள் வந்த சமயத்தில், இன்னும் பார்வைகள் சொருகி, உள்ளங்கள் தொண்டைகளுக்கு எட்டிய சமயத்தில் (உங்கள் செயல்களை அல்லாஹ் நன்கு பார்த்துக் கொண்டிருந்தான்). நீங்கள் (-நயவஞ்சகர்கள்) அல்லாஹ்வின் மீது பல எண்ணங்களை எண்ணினீர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هُنَالِكَ ٱبْتُلِىَ ٱلْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا۟ زِلْزَالًا شَدِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅங்குதான் நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்பட்டார்கள். இன்னும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذْ يَقُولُ ٱلْمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥٓ إِلَّا غُرُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு பொய்யை (ஏமாற்றம் தரக்கூடியதை)த் தவிர (வேறு எதையும்) வாக்களிக்கவில்லை என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذْ قَالَت طَّآئِفَةٌ مِّنْهُمْ يَٰٓأَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَٱرْجِعُوا۟ وَيَسْتَـْٔذِنُ فَرِيقٌ مِّنْهُمُ ٱلنَّبِىَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِىَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionயஸ்ரிப் வாசிகளே! உங்களுக்கு (இந்த போர் மைதானத்தில்) தங்குவது அறவே முடியாது. ஆகவே, (உங்கள் இல்லங்களுக்கு) திரும்பி விடுங்கள் என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். “நிச்சயமாக எங்கள் இல்லங்கள் (திறந்து) பாதுகாப்பு அற்றதாக” இருக்கின்றன என்று கூறியவர்களாக அவர்களில் ஒரு பிரிவினர் நபியிடம் அனுமதி கேட்கின்றனர். ஆனால், அவை பாதுகாப்பு அற்றதாக இல்லை. அவர்கள் (மைதானத்தை விட்டு) விரண்டோடுவதைத் தவிர (வேறு எதையும்) நாடவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَوْ دُخِلَتْ عَلَيْهِم مِّنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا۟ ٱلْفِتْنَةَ لَـَٔاتَوْهَا وَمَا تَلَبَّثُوا۟ بِهَآ إِلَّا يَسِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-அந்த முனாஃபிக்குகள்) மீது அதன் (-மதீனாவின்) சுற்றுப் புறங்களில் இருந்து (படைகள்) நுழைந்தால், பிறகு குழப்பத்தை (-இணைவைத்தலை செய்யும்படி) அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் அதை செய்திருப்பார்கள். அதற்கு (-நிராகரிப்பாளர்களின் கூற்றுக்கு பதில் தருவதற்கு) அவர்கள் கொஞ்ச (நேர)மே தவிர தாமதித்திருக்க மாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَقَدْ كَانُوا۟ عَٰهَدُوا۟ ٱللَّهَ مِن قَبْلُ لَا يُوَلُّونَ ٱلْأَدْبَٰرَ وَكَانَ عَهْدُ ٱللَّهِ مَسْـُٔولًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக இதற்கு முன்னர் “தாங்கள் புறமுதுகிட்டு ஓடமாட்டார்கள்” என்று அவர்கள் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். அல்லாஹ்வின் (பெயர்கூறி இவர்கள் செய்த) ஒப்பந்தம் விசாரிக்கப்படுவதாக இருக்கின்றது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قُل لَّن يَنفَعَكُمُ ٱلْفِرَارُ إِن فَرَرْتُم مِّنَ ٱلْمَوْتِ أَوِ ٱلْقَتْلِ وَإِذًا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில்) சுகமளிக்கப்பட மாட்டீர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قُلْ مَن ذَا ٱلَّذِى يَعْصِمُكُم مِّنَ ٱللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوٓءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) கூறுவீராக! அல்லாஹ், உங்களுக்கு ஒரு தீங்கை நாடினால் அல்லாஹ்வை விட்டும் உங்களைப் பாதுகாக்கின்றவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு கருணை புரிய நாடினால் (அதையும் யாரால் நிறுத்த முடியும்?). அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு பொறுப்பாளரையோ உதவியாளரையோ அவர்கள் காணமாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلْمُعَوِّقِينَ مِنكُمْ وَٱلْقَآئِلِينَ لِإِخْوَٰنِهِمْ هَلُمَّ إِلَيْنَا وَلَا يَأْتُونَ ٱلْبَأْسَ إِلَّا قَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் (நபியை விட்டு மக்களை) தடுப்பவர்களையும் தங்கள் சகோதரர்களுக்கு, எங்களிடம் வந்துவிடுங்கள் என்று சொல்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர (பெரும்பாலும்) போருக்கு வரமாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَشِحَّةً عَلَيْكُمْ فَإِذَا جَآءَ ٱلْخَوْفُ رَأَيْتَهُمْ يَنظُرُونَ إِلَيْكَ تَدُورُ أَعْيُنُهُمْ كَٱلَّذِى يُغْشَىٰ عَلَيْهِ مِنَ ٱلْمَوْتِ فَإِذَا ذَهَبَ ٱلْخَوْفُ سَلَقُوكُم بِأَلْسِنَةٍ حِدَادٍ أَشِحَّةً عَلَى ٱلْخَيْرِ أُو۟لَٰٓئِكَ لَمْ يُؤْمِنُوا۟ فَأَحْبَطَ ٱللَّهُ أَعْمَٰلَهُمْ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு உதவாமல்) மிகக் கருமிகளாக இருக்கின்றனர். (போர் பற்றிய) பயம் (அவர்களுக்கு) வந்தால், மரண (பய)த்தால் மயக்கம் அடைகின்றவனைப் போல் அவர்களது கண்கள் சுழலக்கூடிய நிலையில், உம் பக்கம் அவர்கள் பார்க்கக்கூடியவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை நீர் காண்பீர். (எதிரிகளைப் பற்றி) பயம் சென்றுவிட்டால் செல்வத்தின் மீது பேராசையுடையவர்களாக கூர்மையான நாவுகளினால் (அத்துமீறி) உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர் (உங்களை ஏசுகின்றனர்). அவர்கள் (உண்மையில்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களின் அமல்களை அல்லாஹ் பாழ்ப்படுத்திவிட்டான். இது அல்லாஹ்விற்கு மிக எளிதாக இருக்கின்றது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَحْسَبُونَ ٱلْأَحْزَابَ لَمْ يَذْهَبُوا۟ وَإِن يَأْتِ ٱلْأَحْزَابُ يَوَدُّوا۟ لَوْ أَنَّهُم بَادُونَ فِى ٱلْأَعْرَابِ يَسْـَٔلُونَ عَنْ أَنۢبَآئِكُمْ وَلَوْ كَانُوا۟ فِيكُم مَّا قَٰتَلُوٓا۟ إِلَّا قَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-நயவஞ்சகர்கள்) இராணுவங்கள் (தங்கள் ஊர்களுக்கு திரும்ப) செல்லவில்லை என்று எண்ணுகின்றனர். அந்த இராணுவங்கள் (திரும்ப) வந்தால் நிச்சயமாக கிராமவாசிகளுடன் கிராமங்களில் அவர்கள் இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுகின்றனர். உங்கள் செய்திகளைப் பற்றி அவர்கள் விசாரிக்கின்றனர். அவர்கள் உங்களுடன் இருந்தாலும் அவர்கள் (எதிரிகளிடம்) மிகக் குறைவாகவே தவிர போர் புரிந்திருக்க மாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَّقَدْ كَانَ لَكُمْ فِى رَسُولِ ٱللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُوا۟ ٱللَّهَ وَٱلْيَوْمَ ٱلْـَٔاخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு -அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்கு திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும் அவர் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்வார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَمَّا رَءَا ٱلْمُؤْمِنُونَ ٱلْأَحْزَابَ قَالُوا۟ هَٰذَا مَا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥ وَصَدَقَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَمَا زَادَهُمْ إِلَّآ إِيمَٰنًا وَتَسْلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்கள் இராணுவங்களைப் பார்த்தபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு வாக்களித்ததாகும் இது. அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மை கூறினார்கள்” என்று கூறினார்கள். அது (-இராணுவங்களின் வருகை) நம்பிக்கையையும் திருப்தி (-கட்டுப்படுதலையும் பொறுமை)யையும் தவிர (வேறெதையும்) அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مِّنَ ٱلْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا۟ مَا عَٰهَدُوا۟ ٱللَّهَ عَلَيْهِ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُۥ وَمِنْهُم مَّن يَنتَظِرُ وَمَا بَدَّلُوا۟ تَبْدِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விடம் எதன்மீது ஒப்பந்தம் செய்தார்களோ அதை உண்மைப்படுத்திய ஆண்களும் நம்பிக்கையாளர்களில் இருக்கின்றனர். தனது நேர்ச்சையை நிறைவேற்றியவரும் அவர்களில் உண்டு. (வீர மரணத்தை) எதிர்பார்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்கள் (-அந்த நம்பிக்கையாளர்கள் தங்கள் ஒப்பந்தத்தை) மாற்றிவிடவில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِّيَجْزِىَ ٱللَّهُ ٱلصَّٰدِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ ٱلْمُنَٰفِقِينَ إِن شَآءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, அல்லாஹ் உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கு நற்கூலி தருவான். நயவஞ்சகர்களை அவன் நாடினால் தண்டிப்பான். அல்லது அவர்களை பிழை பொறு(த்து ஈமானை ஏற்கவை)ப்பான். (ஆகவே, அவர்களின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு பெறுவார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَرَدَّ ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا۟ خَيْرًا وَكَفَى ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ ٱلْقِتَالَ وَكَانَ ٱللَّهُ قَوِيًّا عَزِيزًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்களை அவர்களது கோபத்துடன் அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் (இந்தப் போரினால்) எந்த நன்மையையும் அடைய வில்லை. நம்பிக்கையாளர்களை போரை விட்டும் அல்லாஹ் பாதுகாத்தான். அல்லாஹ் மகா வலிமை மிக்கவனாக, மிகைத்தவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَأَنزَلَ ٱلَّذِينَ ظَٰهَرُوهُم مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ مِن صَيَاصِيهِمْ وَقَذَفَ فِى قُلُوبِهِمُ ٱلرُّعْبَ فَرِيقًا تَقْتُلُونَ وَتَأْسِرُونَ فَرِيقًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதக்காரர்களில் இருந்து அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) உதவியவர்களை அவர்களின் கோட்டைகளில் இருந்து அல்லாஹ் இறக்கினான். அவர்களின் உள்ளங்களில் திகிலை போட்டான். (அவர்களில்) ஒரு பிரிவினரை கொன்றீர்கள். ஒரு பிரிவினரை சிறைப் பிடித்தீர்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَٰرَهُمْ وَأَمْوَٰلَهُمْ وَأَرْضًا لَّمْ تَطَـُٔوهَا وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் அவர்களின் பூமியையும் அவர்களின் இல்லங்களையும் அவர்களின் செல்வங்களையும் இன்னும் நீங்கள் (உங்கள் பாதங்களால்) மிதிக்காத ஒரு பூமியையும் உங்களுக்கு சொந்தமாக்கினான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே! உமது மனைவிகளுக்கு சொல்வீராக! “உலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்புகிறவர்களாக இருந்தால் வாருங்கள்! உங்களுக்கு செல்வம் தருகின்றேன்; அழகிய முறையில் உங்களை விட்டு விடுகின்றேன்.”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِن كُنتُنَّ تُرِدْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلدَّارَ ٱلْـَٔاخِرَةَ فَإِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَٰتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (சொர்க்கமாகிய) மறுமை வீட்டையும் விரும்பியவர்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களில் நல்லவர்களுக்கு மகத்தான கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰنِسَآءَ ٱلنَّبِىِّ مَن يَأْتِ مِنكُنَّ بِفَٰحِشَةٍ مُّبَيِّنَةٍ يُضَٰعَفْ لَهَا ٱلْعَذَابُ ضِعْفَيْنِ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியின் மனைவிகளே! உங்களில் யார் தெளிவான மானக்கேடான செயலை செய்வாரோ அவருக்கு வேதனை இரு மடங்காக ஆக்கப்படும். அது அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கின்றது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِۦ وَتَعْمَلْ صَٰلِحًا نُّؤْتِهَآ أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியின் மனைவிகளே!) உங்களில் யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பணிந்து நடப்பாரோ, இன்னும் நன்மையை செய்வாரோ அவருக்கு அவரது கூலியை இருமுறை நாம் கொடுப்போம். இன்னும், அவருக்கு கண்ணியமான உணவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰنِسَآءَ ٱلنَّبِىِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ ٱلنِّسَآءِ إِنِ ٱتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِٱلْقَوْلِ فَيَطْمَعَ ٱلَّذِى فِى قَلْبِهِۦ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியின் மனைவிகளே! நீங்கள் (பொதுவான) பெண்களில் ஒருவரைப் போன்று இல்லை நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால். ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள். தனது உள்ளத்தில் நோய் உள்ளவன் தப்பாசைப்படுவான். இன்னும் சரியான (முறையான) பேச்சை பேசுங்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَقَرْنَ فِى بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ ٱلْجَٰهِلِيَّةِ ٱلْأُولَىٰ وَأَقِمْنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ ٱلرِّجْسَ أَهْلَ ٱلْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் இல்லங்களில் தங்கியிருங்கள். (கண்ணியத்துடன் இருங்கள்.) முந்திய அறியாமைக் காலத்தில் அலங்காரங்களை வெளிப்படுத்தியது போன்று நீங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள். (முகத்தை திறந்தவர்களாக வெளியே செல்லாதீர்கள்.) தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! (நபியின்) வீட்டார்களே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் அசுத்தத்தை (பாவத்தை) போக்குவதற்கும் உங்களை முற்றிலும் சுத்தப்படுத்துவதற்கும்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱذْكُرْنَ مَا يُتْلَىٰ فِى بُيُوتِكُنَّ مِنْ ءَايَٰتِ ٱللَّهِ وَٱلْحِكْمَةِ إِنَّ ٱللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(தொழுகையில்) ஓதப்படுகின்றவற்றை அதாவது அல்லாஹ்வின் வசனங்களை இன்னும் ஞானத்தை (-நபியின் பொன்மொழிகளை) உங்கள் இல்லங்களில் மனனம் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக கருணையாளனாக ஆழ்ந்தறிபவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلْمُسْلِمِينَ وَٱلْمُسْلِمَٰتِ وَٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَٱلْقَٰنِتِينَ وَٱلْقَٰنِتَٰتِ وَٱلصَّٰدِقِينَ وَٱلصَّٰدِقَٰتِ وَٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰبِرَٰتِ وَٱلْخَٰشِعِينَ وَٱلْخَٰشِعَٰتِ وَٱلْمُتَصَدِّقِينَ وَٱلْمُتَصَدِّقَٰتِ وَٱلصَّٰٓئِمِينَ وَٱلصَّٰٓئِمَٰتِ وَٱلْحَٰفِظِينَ فُرُوجَهُمْ وَٱلْحَٰفِظَٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرًا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள், பணிவான ஆண்கள், பணிவான பெண்கள், உண்மையான ஆண்கள், உண்மையான பெண்கள், பொறுமையான ஆண்கள், பொறுமையான பெண்கள், உள்ளச்சமுடைய ஆண்கள், உள்ளச்சமுடைய பெண்கள், தர்மம் செய்கின்ற ஆண்கள், தர்மம் செய்கின்ற பெண்கள், நோன்பாளியான ஆண்கள், நோன்பாளியான பெண்கள், தங்கள் மறைவிடங்களை பேணுகின்ற ஆண்கள், பேணுகின்ற பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூரக்கூடிய ஆண்கள், நினைவு கூரக்கூடிய பெண்கள் - இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَٰلًا مُّبِينًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையுடைய ஆணுக்கும் நம்பிக்கையுடைய பெண்ணுக்கும் தங்களது காரியத்தில் அவர்களுக்கு என்று ஒரு விருப்பம் இருப்பது ஆகுமானதல்ல அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வாரோ அவர் திட்டமாக தெளிவாக வழிகெட்டுவிட்டார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِذْ تَقُولُ لِلَّذِىٓ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخْفِى فِى نَفْسِكَ مَا ٱللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَىٰهُ فَلَمَّا قَضَىٰ زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَٰكَهَا لِكَىْ لَا يَكُونَ عَلَى ٱلْمُؤْمِنِينَ حَرَجٌ فِىٓ أَزْوَٰجِ أَدْعِيَآئِهِمْ إِذَا قَضَوْا۟ مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ இன்னும் நீர் அருள் புரிந்தீரோ அவருக்கு, “உன் மனைவியை உன்னுடன் வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!” என்று நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடியவனாக உள்ள ஒன்றை உமது உள்ளத்தில் நீர் மறைக்கிறீர். மக்களை பயப்படுகின்றீர். அல்லாஹ்தான், அவனை நீர் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். சைது அவளிடம் தேவையை முடித்துவிட்டபோது, -நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவிகள் விஷயத்தில், அவர்களிடம் (-அந்த மனைவிகளிடம்) அவர்கள் (-அந்த வளர்ப்புப் பிள்ளைகள்) தேவையை முடித்துவிட்டபோது (அப்பெண்களை வளர்ப்புப் பிள்ளைகளின் தந்தைகள் திருமணம் முடித்துக் கொள்வதில்) சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக- அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம். அல்லாஹ்வின் காரியம் (கண்டிப்பாக) நடக்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَّا كَانَ عَلَى ٱلنَّبِىِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ ٱللَّهُ لَهُۥ سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُ وَكَانَ أَمْرُ ٱللَّهِ قَدَرًا مَّقْدُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் தனக்கு கடமையாக்கியதை செய்வதில் நபியின் மீது அறவே குற்றமிருக்கவில்லை. இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் வழிமுறையைத்தான் (நபியே! உமக்கும் வழிமுறையாக ஆக்கப்பட்டது). அல்லாஹ்வின் செயல் நிறைவேற்றப்படுகின்ற தீர்ப்பாக இருக்கின்றது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِينَ يُبَلِّغُونَ رِسَٰلَٰتِ ٱللَّهِ وَيَخْشَوْنَهُۥ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا ٱللَّهَ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-அந்த தூதர்கள்) அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை - சட்டங்களை எடுத்துச் சொல்வார்கள்; அவனை பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர ஒருவரையும் பயப்படமாட்டார்கள். அல்லாஹ்வே போதுமான விசாரணையாளன் ஆவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுஹம்மது உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ ٱللَّهَ ذِكْرًا كَثِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை மிக அதிகம் நினைவு கூருங்கள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவனை காலையிலும் மாலையிலும் துதியுங்கள். (ஸுப்ஹு, இன்னும் அஸ்ரு தொழுகையை நிறைவேற்றுங்கள்.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

هُوَ ٱلَّذِى يُصَلِّى عَلَيْكُمْ وَمَلَٰٓئِكَتُهُۥ لِيُخْرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَكَانَ بِٱلْمُؤْمِنِينَ رَحِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் உங்கள் மீது அருள் புரிவான், இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் உங்களை அவன் வெளியேற்றுவதற்காக. இன்னும், அவனது வானவர்கள் (உங்களுக்காக அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பார்கள். அவன் நம்பிக்கையாளர்கள் மீது மகா கருணையுள்ளவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُۥ سَلَٰمٌ وَأَعَدَّ لَهُمْ أَجْرًا كَرِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில் அவர்களது முகமன் ஸலாம் ஆகும். இன்னும் அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِنَّآ أَرْسَلْنَٰكَ شَٰهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَدَاعِيًا إِلَى ٱللَّهِ بِإِذْنِهِۦ وَسِرَاجًا مُّنِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ ٱللَّهِ فَضْلًا كَبِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிகப் பெரிய அருள் இருக்கிறது” என்று.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَا تُطِعِ ٱلْكَٰفِرِينَ وَٱلْمُنَٰفِقِينَ وَدَعْ أَذَىٰهُمْ وَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்! அவர்களின் தொந்தரவை (கண்டு கொள்ளாமல்) விட்டுவிடுவீராக! அல்லாஹ்வை சார்ந்து இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பொறுப்பாளன் ஆவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نَكَحْتُمُ ٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் முடித்தால், பிறகு அவர்களுடன் நீங்கள் உறவு வைப்பதற்கு முன்னர் அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் நீங்கள் கணக்கிட வேண்டிய எவ்வித இத்தாவும் உங்களுக்கு அவர்கள் மீது (கடமை) இல்லை. அவர்களுக்கு செல்வத்தை கொடுங்கள்! அழகிய முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِنَّآ أَحْلَلْنَا لَكَ أَزْوَٰجَكَ ٱلَّٰتِىٓ ءَاتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّٰتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَٰلَٰتِكَ ٱلَّٰتِى هَاجَرْنَ مَعَكَ وَٱمْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ إِنْ أَرَادَ ٱلنَّبِىُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىٓ أَزْوَٰجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே! நீர் திருமணக் கொடைகளை (-மஹரை) கொடுத்(து மணமுடித்)த உமது மனைவிகளையும் அல்லாஹ் உமக்கு போரில் கொடுத்த அடிமைப் பெண்களில் உமது வலக்கரம் சொந்தமாகியவர்களையும் (-உமக்கு என்று வைத்துக்கொண்ட பெண்களையும்) உம்முடன் ஹிஜ்ரா செய்துவந்த உமது சாச்சாவின் மகள்களையும் உமது மாமியின் மகள்களையும் உமது தாய் மாமாவின் மகள்களையும் உமது காலா (சிறிய தாய், பெரிய தாய்) உடைய மகள்களையும் நிச்சயமாக நாம் உமக்கு (நீர் அவர்களை மணமுடிப்பதை) ஆகுமாக்கினோம். இன்னும், ஒரு முஃமினான பெண், தன்னை நபிக்கு அன்பளிப்பு செய்தால், நபியும் அவளை மணமுடிக்க நாடினால் அந்த பெண்ணையும் (உமக்கு ஆகுமாக்கினோம்). இது (மஹர் இன்றி மணமுடிப்பது பொதுவான) முஃமின்கள் அன்றி உமக்கு மட்டும் பிரத்தியோகமாகும். அவர்கள் மீது (-நம்பிக்கையாளர்கள் மீது) அவர்களின் மனைவிமார்கள் இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் (-அடிமைப் பெண்கள்) விஷயத்தில் நாம் கடமையாக்கியதை திட்டமாக நாம் அறிவோம். (நபியே!) உமக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக (நாம் மேற்கூறப்பட்ட பெண்களை மணமுடிப்பதையும் தன்னை அன்பளிப்புச் செய்யும் பெண்ணை மஹரின்றி மணமுடிப்பதையும் உமக்கு ஆகுமாக்கினோம்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

تُرْجِى مَن تَشَآءُ مِنْهُنَّ وَتُـْٔوِىٓ إِلَيْكَ مَن تَشَآءُ وَمَنِ ٱبْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن تَقَرَّ أَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَآ ءَاتَيْتَهُنَّ كُلُّهُنَّ وَٱللَّهُ يَعْلَمُ مَا فِى قُلُوبِكُمْ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்களில் (-உமது மனைவிகளில்) நீர் நாடுகின்றவரை தள்ளிவைப்பீராக! நீர் நாடுகின்றவரை உம் பக்கம் சேர்த்துக்கொள்வீராக! நீர் நீக்கிவிட்டவர்களில் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ அது உம்மீது குற்றம் இல்லை. இது அவர்களின் கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும் நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு அவர்கள் எல்லோரும் திருப்தி அடைவதற்கும் சுலபமானதாகும். அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிவான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா சகிப்பாளனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَّا يَحِلُّ لَكَ ٱلنِّسَآءُ مِنۢ بَعْدُ وَلَآ أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَٰجٍ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ إِلَّا مَا مَلَكَتْ يَمِينُكَ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ رَّقِيبًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஐம்பதாவது வசனத்தில் கூறப்பட்ட பெண்களுக்கு) பின்னர் (வேறு) பெண்கள் உமக்கு ஆகுமாக மாட்டார்கள். இன்னும் இவர்களுக்கு பதிலாக (வேறு) பெண்களை நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல, அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. உமது வலக்கரம் சொந்தமாக்கிய பெண்களைத் தவிர. (அடிமைப் பெண்கள் யாராக இருந்தாலும் உமக்கு ஆகுமானவர்களே.) அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَدْخُلُوا۟ بُيُوتَ ٱلنَّبِىِّ إِلَّآ أَن يُؤْذَنَ لَكُمْ إِلَىٰ طَعَامٍ غَيْرَ نَٰظِرِينَ إِنَىٰهُ وَلَٰكِنْ إِذَا دُعِيتُمْ فَٱدْخُلُوا۟ فَإِذَا طَعِمْتُمْ فَٱنتَشِرُوا۟ وَلَا مُسْتَـْٔنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَٰلِكُمْ كَانَ يُؤْذِى ٱلنَّبِىَّ فَيَسْتَحْىِۦ مِنكُمْ وَٱللَّهُ لَا يَسْتَحْىِۦ مِنَ ٱلْحَقِّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَٰعًا فَسْـَٔلُوهُنَّ مِن وَرَآءِ حِجَابٍ ذَٰلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَن تُؤْذُوا۟ رَسُولَ ٱللَّهِ وَلَآ أَن تَنكِحُوٓا۟ أَزْوَٰجَهُۥ مِنۢ بَعْدِهِۦٓ أَبَدًا إِنَّ ذَٰلِكُمْ كَانَ عِندَ ٱللَّهِ عَظِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! ஓர் உணவின் பக்கம் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் தவிர நபியின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள். (அப்படி அழைக்கப்பட்டாலும்) அது தயாராவதை எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். என்றாலும், நீங்கள் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால் (வீட்டினுள்) நுழையுங்கள். நீங்கள் சாப்பிட்டுவிட்டால் (வீட்டிலிருந்து) பிரிந்து (சென்று)விடுங்கள். பேச்சை புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும். நிச்சயமாக இது நபிக்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கின்றது. அவர் உங்களிடம் (அதைக் கூற) வெட்கப்படுவார். அல்லாஹ் சத்தியத்திற்கு வெட்கப்படமாட்டான். நீங்கள் அவர்களிடம் (நபியின் மனைவிகளிடம்) (ஏதேனும்) ஒரு பொருளைக் கேட்டால் திரைக்குப் பின்னால் இருந்து அவர்களிடம் கேளுங்கள். அதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் மிகத் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் தொந்தரவு தருவதும் அவருக்குப் பின்னர் அவருடைய மனைவிகளை நீங்கள் மணமுடிப்பதும் உங்களுக்கு எப்போதும் ஆகுமானதல்ல. நிச்சயமாக இவை அல்லாஹ்விடம் பெரிய பாவமாக இருக்கின்றது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِن تُبْدُوا۟ شَيْـًٔا أَوْ تُخْفُوهُ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினால் அல்லது அதை மறைத்தால் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَّا جُنَاحَ عَلَيْهِنَّ فِىٓ ءَابَآئِهِنَّ وَلَآ أَبْنَآئِهِنَّ وَلَآ إِخْوَٰنِهِنَّ وَلَآ أَبْنَآءِ إِخْوَٰنِهِنَّ وَلَآ أَبْنَآءِ أَخَوَٰتِهِنَّ وَلَا نِسَآئِهِنَّ وَلَا مَا مَلَكَتْ أَيْمَٰنُهُنَّ وَٱتَّقِينَ ٱللَّهَ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது (நபியின் மனைவிகள் மீதும் முஃமினான பெண்கள் மீதும்) தங்கள் தந்தைமார்கள், தங்கள் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகள், தங்கள் (முஃமினான) பெண்கள், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் விஷயத்தில் (-அவர்கள் முன் பர்தா இன்றி இருப்பதில்) குற்றம் இல்லை. (பெண்களே!) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு பார்த்தவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியை வாழ்த்துகின்றனர். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரை வாழ்த்துங்கள்! அவருக்கு ஸலாம் முகமன் கூறுங்கள்!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلَّذِينَ يُؤْذُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَعَنَهُمُ ٱللَّهُ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தொந்தரவு தருபவர்கள் அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கின்றான். இன்னும், அவர்களுக்கு இழிவுபடுத்துகின்ற வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّذِينَ يُؤْذُونَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ بِغَيْرِ مَا ٱكْتَسَبُوا۟ فَقَدِ ٱحْتَمَلُوا۟ بُهْتَٰنًا وَإِثْمًا مُّبِينًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு தொந்தரவு தருபவர்கள் அபாண்டமான பழியையும் தெளிவான பாவத்தையும் திட்டமாக (தங்கள் மேல்) சுமந்து கொண்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّأَزْوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே! உமது மனைவிமார்களுக்கும் உமது பெண் பிள்ளைகளுக்கும் முஃமின்களின் பெண்(பிள்ளை)களுக்கும், அவர்கள் தங்கள் பர்தாக்களை தங்கள் மீது போர்த்திக்கொள்ளும்படி கூறுங்கள்! இது அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்படுவதற்கு மிக சுலபமானதாகும். ஆகவே, அவர்கள் தொந்தரவுக்கு ஆளாக மாட்டார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَّئِن لَّمْ يَنتَهِ ٱلْمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْمُرْجِفُونَ فِى ٱلْمَدِينَةِ لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُونَكَ فِيهَآ إِلَّا قَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் (விபச்சார ஆசை) உள்ளவர்களும் மதீனாவில் கெட்ட விஷயங்களில் ஈடுபடுபவர்களும் (தங்கள் தீய செயல்களிலிருந்து) விலகவில்லை என்றால் உம்மை அவர்கள் மீது (அவர்களை தண்டிக்க) தூண்டிவிடுவோம். பிறகு, அவர்கள் அதில் உம்முடன் குறைவாகவே தவிர வசிக்க மாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَّلْعُونِينَ أَيْنَمَا ثُقِفُوٓا۟ أُخِذُوا۟ وَقُتِّلُوا۟ تَقْتِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும். இன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبْدِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் நடைமுறைதான் (இவர்கள் விஷயத்திலும் பின்பற்றப்படும்). அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் அறவே நீர் காணமாட்டீர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَسْـَٔلُكَ ٱلنَّاسُ عَنِ ٱلسَّاعَةِ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ وَمَا يُدْرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ تَكُونُ قَرِيبًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்கள் உம்மிடம் மறுமையைப் பற்றி (அது எப்போது வரும் என்று) கேட்கின்றனர். (நபியே!) கூறுவீராக! அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது. மறுமை சமீபமாக இருக்கக்கூடும் என்பது உமக்குத் தெரியுமா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱللَّهَ لَعَنَ ٱلْكَٰفِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை (இவ்வுலகில்) சபித்தான். அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரகத்தை (மறுமையில்) ஏற்படுத்தினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا لَّا يَجِدُونَ وَلِيًّا وَلَا نَصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அதில் எப்போதும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். (தங்களுக்கு) பொறுப்பாளரையோ உதவியாளரையோ காணமாட்டார்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِى ٱلنَّارِ يَقُولُونَ يَٰلَيْتَنَآ أَطَعْنَا ٱللَّهَ وَأَطَعْنَا ٱلرَّسُولَا۠

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களது முகங்கள் நெருப்பில் புரட்டப்படுகின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்வுக்கு நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! ரசூலுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!”

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَقَالُوا۟ رَبَّنَآ إِنَّآ أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியோருக்கும் கீழ்ப்படிந்தோம் அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

رَبَّنَآ ءَاتِهِمْ ضِعْفَيْنِ مِنَ ٱلْعَذَابِ وَٱلْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎங்கள் இறைவா! இருமடங்கு வேதனையை அவர்களுக்கு கொடு! அவர்களை பெரிய சாபத்தால் சபிப்பாயாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ ءَاذَوْا۟ مُوسَىٰ فَبَرَّأَهُ ٱللَّهُ مِمَّا قَالُوا۟ وَكَانَ عِندَ ٱللَّهِ وَجِيهًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! மூஸாவிற்கு தொந்தரவு தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் கூறியதிலிருந்து (-அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து) அல்லாஹ் அவரை நிரபராதியாக்கினான். அவர் அல்லாஹ்விடம் மிக சிறப்பிற்குரியவராக இருந்தார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَقُولُوا۟ قَوْلًا سَدِيدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நேர்மையான பேச்சை பேசுங்கள்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يُصْلِحْ لَكُمْ أَعْمَٰلَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (-அல்லாஹ்) உங்கள் அமல்களை உங்களுக்கு சீர்படுத்துவான். உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யார் கீழ்ப்படிகின்றாரோ திட்டமாக அவர் மகத்தான வெற்றி பெறுவார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّا عَرَضْنَا ٱلْأَمَانَةَ عَلَى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا ٱلْإِنسَٰنُ إِنَّهُۥ كَانَ ظَلُومًا جَهُولًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் அமானிதத்தை (-மார்க்கக் கட்டளையை) வானங்கள், பூமி(கள்), இன்னும் மலைகள் மீது சமர்ப்பித்தோம். அவை அதை சுமப்பதற்கு மறுத்துவிட்டன. அதனால் அவை பயந்தன. ஆனால், மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன் அநியாயக்காரனாக அறியாதவனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لِّيُعَذِّبَ ٱللَّهُ ٱلْمُنَٰفِقِينَ وَٱلْمُنَٰفِقَٰتِ وَٱلْمُشْرِكِينَ وَٱلْمُشْرِكَٰتِ وَيَتُوبَ ٱللَّهُ عَلَى ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًۢا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநயவஞ்சகமுடைய ஆண்களையும், நயவஞ்சகமுடைய பெண்களையும், இணைவைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (அல்லாஹ் அவனது கட்டளைகளை கொடுத்து சோதிக்கின்றான்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70