caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 39

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:39

ٱلَّذِينَ يُبَلِّغُونَ رِسَٰلَٰتِ ٱللَّهِ وَيَخْشَوْنَهُۥ وَلَا يَخْشَوْنَ أَحَدًا إِلَّا ٱللَّهَ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-அந்த தூதர்கள்) அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை - சட்டங்களை எடுத்துச் சொல்வார்கள்; அவனை பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர ஒருவரையும் பயப்படமாட்டார்கள். அல்லாஹ்வே போதுமான விசாரணையாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (-அந்தத் தூதர்கள்) அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை - சட்டங்களை எடுத்துச் சொல்வார்கள்; இன்னும் அவனை பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர ஒருவரையும் பயப்படமாட்டார்கள். (அடியார்கள் அனைவரையும்) விசாரிப்பவனாக அல்லாஹ்வே போதுமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi39. அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீர் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70