أَشِحَّةً عَلَيْكُمْ فَإِذَا جَآءَ ٱلْخَوْفُ رَأَيْتَهُمْ يَنظُرُونَ إِلَيْكَ تَدُورُ أَعْيُنُهُمْ كَٱلَّذِى يُغْشَىٰ عَلَيْهِ مِنَ ٱلْمَوْتِ فَإِذَا ذَهَبَ ٱلْخَوْفُ سَلَقُوكُم بِأَلْسِنَةٍ حِدَادٍ أَشِحَّةً عَلَى ٱلْخَيْرِ أُو۟لَٰٓئِكَ لَمْ يُؤْمِنُوا۟ فَأَحْبَطَ ٱللَّهُ أَعْمَٰلَهُمْ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு உதவாமல்) மிகக் கருமிகளாக இருக்கின்றனர். (போர் பற்றிய) பயம் (அவர்களுக்கு) வந்தால், மரண (பய)த்தால் மயக்கம் அடைகின்றவனைப் போல் அவர்களது கண்கள் சுழலக்கூடிய நிலையில், உம் பக்கம் அவர்கள் பார்க்கக்கூடியவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை நீர் காண்பீர். (எதிரிகளைப் பற்றி) பயம் சென்றுவிட்டால் செல்வத்தின் மீது பேராசையுடையவர்களாக கூர்மையான நாவுகளினால் (அத்துமீறி) உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர் (உங்களை ஏசுகின்றனர்). அவர்கள் (உண்மையில்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களின் அமல்களை அல்லாஹ் பாழ்ப்படுத்திவிட்டான். இது அல்லாஹ்விற்கு மிக எளிதாக இருக்கின்றது.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு உதவாமல்) மிகக் கருமிகளாக இருக்கிறார்கள். ஆக, (போர் பற்றிய) பயம் (அவர்களுக்கு) வந்தால், மரண (பய)த்தால் மயக்கம் அடைபவனைப் போல் அவர்களது கண்கள் சுழலக்கூடிய நிலையில், உம் பக்கம் அவர்கள் பார்ப்பவர்களாக அவர்களை நீர் காண்பீர். ஆக, (எதிரிகளைப் பற்றி) பயம் சென்றுவிட்டால் செல்வத்தின் மீது பேராசையுடையவர்களாக கூர்மையான நாவுகளினால் (அத்துமீறி) உங்களுக்கு தொந்தரவு தருகிறார்கள் (-உங்களை ஏசுகிறார்கள்). அவர்கள் (உண்மையில்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களின் அமல்களை அல்லாஹ் பாழ்ப்படுத்திவிட்டான். இது அல்லாஹ்விற்கு மிக எளிதாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi19. (அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீர் காண்பீர். அந்த பயம் நீங்கி (நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தைகளைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதாகவே இருக்கிறது.