caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 16

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:16

قُل لَّن يَنفَعَكُمُ ٱلْفِرَارُ إِن فَرَرْتُم مِّنَ ٱلْمَوْتِ أَوِ ٱلْقَتْلِ وَإِذًا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில்) சுகமளிக்கப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில் வாழ்வதற்கு) நீங்கள் சுகமளிக்கப்பட மாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மரணத்தைவிட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடிய போதிலும், உங்கள் ஓட்டம் உங்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்ட போதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்.''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70