وَٱذْكُرْنَ مَا يُتْلَىٰ فِى بُيُوتِكُنَّ مِنْ ءَايَٰتِ ٱللَّهِ وَٱلْحِكْمَةِ إِنَّ ٱللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(தொழுகையில்) ஓதப்படுகின்றவற்றை அதாவது அல்லாஹ்வின் வசனங்களை இன்னும் ஞானத்தை (-நபியின் பொன்மொழிகளை) உங்கள் இல்லங்களில் மனனம் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக கருணையாளனாக ஆழ்ந்தறிபவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், படிக்கப்பட வேண்டிய அல்லாஹ்வின் வேத வசனங்களையும் (நபியின் சுன்னாவாகிய) ஞானத்தையும் நீங்கள் உங்கள் இல்லங்களில் (படித்து) மனனம் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக கருணையாளனாக ஆழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.