caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 17

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:17

قُلْ مَن ذَا ٱلَّذِى يَعْصِمُكُم مِّنَ ٱللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوٓءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) கூறுவீராக! அல்லாஹ், உங்களுக்கு ஒரு தீங்கை நாடினால் அல்லாஹ்வை விட்டும் உங்களைப் பாதுகாக்கின்றவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு கருணை புரிய நாடினால் (அதையும் யாரால் நிறுத்த முடியும்?). அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு பொறுப்பாளரையோ உதவியாளரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே) கூறுவீராக! அல்லாஹ், உங்களுக்கு ஒரு தீங்கை நாடினால் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் உங்களுக்கு கருணை புரிய நாடினால் (அதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?). அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு பொறுப்பாளரையோ உதவியாளரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. (நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார் அல்லது உங்களுக்கு அருள்புரிய நாடினால் அதை தடுப்பவன் யார்? அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாப்பவர்களையும் காணமாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70