لَّقَدْ كَانَ لَكُمْ فِى رَسُولِ ٱللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُوا۟ ٱللَّهَ وَٱلْيَوْمَ ٱلْـَٔاخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு -அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்கு திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும் அவர் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்வார்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு - அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்தவராக இருப்பவருக்கு - திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும், அவர் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்பவராகவும் இருப்பார்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.