caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 7

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:7

وَإِذْ أَخَذْنَا مِنَ ٱلنَّبِيِّـۧنَ مِيثَٰقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَى ٱبْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَٰقًا غَلِيظًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎல்லா நபிமார்களிடமும் உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் அவர்களின் ஒப்பந்தத்தை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக. அவர்களிடம் உறுதியான ஒப்பந்தத்தை நாம் வாங்கினோம்.
Tamil Translation - Omar Sharifஎல்லா நபிமார்களிடமும் (அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்று) அவர்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், (அதே வாக்குறுதியை) உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் வாங்கினோம். இன்னும், அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை நாம் வாங்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70