caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 38

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:38

مَّا كَانَ عَلَى ٱلنَّبِىِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ ٱللَّهُ لَهُۥ سُنَّةَ ٱللَّهِ فِى ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلُ وَكَانَ أَمْرُ ٱللَّهِ قَدَرًا مَّقْدُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் தனக்கு கடமையாக்கியதை செய்வதில் நபியின் மீது அறவே குற்றமிருக்கவில்லை. இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் வழிமுறையைத்தான் (நபியே! உமக்கும் வழிமுறையாக ஆக்கப்பட்டது). அல்லாஹ்வின் செயல் நிறைவேற்றப்படுகின்ற தீர்ப்பாக இருக்கின்றது.
Tamil Translation - Omar Sharifநபியின் மீது, அல்லாஹ் அவருக்கு கடமையாக்கியதை செய்வதில் அறவே குற்றம் இருக்கவில்லை. இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் வழிமுறையை (நபியே! உமக்கும்) வழிமுறையாக ஆக்கப்பட்டது. அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்படுகிற தீர்ப்பாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi38. அல்லாஹ் தனக்கு சட்டமாக்கிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு (நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70