وَأَوْرَثَكُمْ أَرْضَهُمْ وَدِيَٰرَهُمْ وَأَمْوَٰلَهُمْ وَأَرْضًا لَّمْ تَطَـُٔوهَا وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் அவர்களின் பூமியையும் அவர்களின் இல்லங்களையும் அவர்களின் செல்வங்களையும் இன்னும் நீங்கள் (உங்கள் பாதங்களால்) மிதிக்காத ஒரு பூமியையும் உங்களுக்கு சொந்தமாக்கினான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களின் பூமியையும் அவர்களின் இல்லங்களையும் அவர்களின் செல்வங்களையும் நீங்கள் (உங்கள் பாதங்களால்) மிதிக்காத ஒரு பூமியையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்தமாக்கி கொடுத்தான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரை) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்த மாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.