وَأَنزَلَ ٱلَّذِينَ ظَٰهَرُوهُم مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ مِن صَيَاصِيهِمْ وَقَذَفَ فِى قُلُوبِهِمُ ٱلرُّعْبَ فَرِيقًا تَقْتُلُونَ وَتَأْسِرُونَ فَرِيقًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதக்காரர்களில் இருந்து அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) உதவியவர்களை அவர்களின் கோட்டைகளில் இருந்து அல்லாஹ் இறக்கினான். அவர்களின் உள்ளங்களில் திகிலை போட்டான். (அவர்களில்) ஒரு பிரிவினரை கொன்றீர்கள். ஒரு பிரிவினரை சிறைப் பிடித்தீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வேதக்காரர்களில் இருந்து அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) உதவியவர்களை அவர்களின் கோட்டைகளில் இருந்து அல்லாஹ் இறக்கினான். இன்னும், அவர்களின் உள்ளங்களில் திகிலை போட்டான். (அவர்களில்) ஒரு பிரிவினரை நீங்கள் கொன்றீர்கள். இன்னும், ஒரு பிரிவினரை சிறைப் பிடித்தீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. (நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதக்காரர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்கவைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள்.