وَإِذْ قَالَت طَّآئِفَةٌ مِّنْهُمْ يَٰٓأَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَٱرْجِعُوا۟ وَيَسْتَـْٔذِنُ فَرِيقٌ مِّنْهُمُ ٱلنَّبِىَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِىَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionயஸ்ரிப் வாசிகளே! உங்களுக்கு (இந்த போர் மைதானத்தில்) தங்குவது அறவே முடியாது. ஆகவே, (உங்கள் இல்லங்களுக்கு) திரும்பி விடுங்கள் என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். “நிச்சயமாக எங்கள் இல்லங்கள் (திறந்து) பாதுகாப்பு அற்றதாக” இருக்கின்றன என்று கூறியவர்களாக அவர்களில் ஒரு பிரிவினர் நபியிடம் அனுமதி கேட்கின்றனர். ஆனால், அவை பாதுகாப்பு அற்றதாக இல்லை. அவர்கள் (மைதானத்தை விட்டு) விரண்டோடுவதைத் தவிர (வேறு எதையும்) நாடவில்லை.
Tamil Translation - Omar Sharif“யஸ்ரிப் வாசிகளே! உங்களுக்கு (இந்த போர் மைதானத்தில் தாக்குப்பிடித்து) தங்குவது அறவே முடியாது. ஆகவே, (உங்கள் இல்லங்களுக்கு) திரும்பி விடுங்கள்” என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். இன்னும், அவர்களில் ஒரு பிரிவினர் (போரில் கலந்துகொள்ளாமல் இருக்க) நபியிடம் அனுமதி கேட்கிறார்கள். “நிச்சயமாக எங்கள் இல்லங்கள் பாதுகாப்பு அற்றதாக இருக்கின்றன” என்று கூறுகிறார்கள். ஆனால், அவை பாதுகாப்பு அற்றதாக இல்லை. அவர்கள் (போர்க்களத்தை விட்டு) விரண்டோடுவதைத் தவிர (போர்க்களத்தில் நின்று உறுதியாக போர் செய்வதை) நாடவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi13. அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ‘‘யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் ‘‘ நிச்சயமாக எங்கள் வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நம்) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை.