caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 52

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:52

لَّا يَحِلُّ لَكَ ٱلنِّسَآءُ مِنۢ بَعْدُ وَلَآ أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَٰجٍ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ إِلَّا مَا مَلَكَتْ يَمِينُكَ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ رَّقِيبًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஐம்பதாவது வசனத்தில் கூறப்பட்ட பெண்களுக்கு) பின்னர் (வேறு) பெண்கள் உமக்கு ஆகுமாக மாட்டார்கள். இன்னும் இவர்களுக்கு பதிலாக (வேறு) பெண்களை நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல, அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. உமது வலக்கரம் சொந்தமாக்கிய பெண்களைத் தவிர. (அடிமைப் பெண்கள் யாராக இருந்தாலும் உமக்கு ஆகுமானவர்களே.) அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharif(இந்த அத்தியாயத்தின் ஐம்பதாவது வசனத்தில் கூறப்பட்ட பெண்களுக்கு) பின்னர் (வேறு) பெண்கள் உமக்கு ஆகுமாக மாட்டார்கள். இன்னும், இவர்களுக்கு பதிலாக (வேறு) பெண்களை நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல, அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. உமது வலக்கரம் சொந்தமாக்கிய பெண்களைத் தவிர. (அந்த அடிமைப் பெண்கள் உமக்கு ஆகுமானவர்களே.) அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. (நபியே! இப்போதிருக்கும் உமது மனைவிகளுக்குப்) பின்னர், வேறு பெண்கள் (அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள) உமக்கு ஆகுமாக மாட்டார்கள். மேலும், ஒரு பெண்ணின் அழகு உம்மை கவர்ந்தபோதிலும் உமது மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உமக்கு ஆகுமாகாது. ஆயினும், உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறல்ல. (அவள் உமக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70