وَلَوْ دُخِلَتْ عَلَيْهِم مِّنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا۟ ٱلْفِتْنَةَ لَـَٔاتَوْهَا وَمَا تَلَبَّثُوا۟ بِهَآ إِلَّا يَسِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-அந்த முனாஃபிக்குகள்) மீது அதன் (-மதீனாவின்) சுற்றுப் புறங்களில் இருந்து (படைகள்) நுழைந்தால், பிறகு குழப்பத்தை (-இணைவைத்தலை செய்யும்படி) அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் அதை செய்திருப்பார்கள். அதற்கு (-நிராகரிப்பாளர்களின் கூற்றுக்கு பதில் தருவதற்கு) அவர்கள் கொஞ்ச (நேர)மே தவிர தாமதித்திருக்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(மதீனாவில் உள்ள) அவர்கள் (-முனாஃபிக்குகள்) மீது அதனுடைய சுற்றுப் புறங்களில் இருந்து (படைகள்) நுழைந்தால், பிறகு குழப்பம் விளைவிக்கும்படி (-நிராகரிப்பையும் இணைவைத்தலையும் செய்யும்படி) அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் அதை (உடனே) செய்திருப்பார்கள். (நிராகரிப்பாளர்களின் அழைப்புக்கு பதில் தர) அவர்கள் கொஞ்ச (நேர)மே தவிர தாமதித்திருக்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். மேலும், (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமே தவிர அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.)