caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 10

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:10

إِذْ جَآءُوكُم مِّن فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنكُمْ وَإِذْ زَاغَتِ ٱلْأَبْصَٰرُ وَبَلَغَتِ ٱلْقُلُوبُ ٱلْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு மேல் புறத்திலிருந்தும் உங்களுக்கு கீழ்ப்புறத்திலிருந்தும் உங்களிடம் அவர்கள் வந்த சமயத்தில், இன்னும் பார்வைகள் சொருகி, உள்ளங்கள் தொண்டைகளுக்கு எட்டிய சமயத்தில் (உங்கள் செயல்களை அல்லாஹ் நன்கு பார்த்துக் கொண்டிருந்தான்). நீங்கள் (-நயவஞ்சகர்கள்) அல்லாஹ்வின் மீது பல எண்ணங்களை எண்ணினீர்கள்.
Tamil Translation - Omar Sharifஉங்களுக்கு மேல் புறத்திலிருந்தும் உங்களுக்கு கீழ்ப்புறத்திலிருந்தும் உங்களிடம் அவர்கள் வந்த சமயத்தில், இன்னும் பார்வைகள் சொருகி, உள்ளங்கள் தொண்டைகளுக்கு எட்டிய சமயத்தில் (உங்கள் செயல்களை அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருந்தான்). (நயவஞ்சகர்களே!) நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி பல (தப்பான) எண்ணங்களை எண்ணினீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70