caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 35

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:35

إِنَّ ٱلْمُسْلِمِينَ وَٱلْمُسْلِمَٰتِ وَٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَٱلْقَٰنِتِينَ وَٱلْقَٰنِتَٰتِ وَٱلصَّٰدِقِينَ وَٱلصَّٰدِقَٰتِ وَٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰبِرَٰتِ وَٱلْخَٰشِعِينَ وَٱلْخَٰشِعَٰتِ وَٱلْمُتَصَدِّقِينَ وَٱلْمُتَصَدِّقَٰتِ وَٱلصَّٰٓئِمِينَ وَٱلصَّٰٓئِمَٰتِ وَٱلْحَٰفِظِينَ فُرُوجَهُمْ وَٱلْحَٰفِظَٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرًا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள், பணிவான ஆண்கள், பணிவான பெண்கள், உண்மையான ஆண்கள், உண்மையான பெண்கள், பொறுமையான ஆண்கள், பொறுமையான பெண்கள், உள்ளச்சமுடைய ஆண்கள், உள்ளச்சமுடைய பெண்கள், தர்மம் செய்கின்ற ஆண்கள், தர்மம் செய்கின்ற பெண்கள், நோன்பாளியான ஆண்கள், நோன்பாளியான பெண்கள், தங்கள் மறைவிடங்களை பேணுகின்ற ஆண்கள், பேணுகின்ற பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூரக்கூடிய ஆண்கள், நினைவு கூரக்கூடிய பெண்கள் - இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள், (மார்க்க சட்டங்களுக்கு) கீழ்ப்படிந்து நடக்கும் ஆண்கள், கீழ்ப்படிந்து நடக்கும் பெண்கள், உண்மையான ஆண்கள், உண்மையான பெண்கள், பொறுமையான ஆண்கள், பொறுமையான பெண்கள், உள்ளச்சமுடைய ஆண்கள், உள்ளச்சமுடைய பெண்கள், தர்மம் செய்கிற ஆண்கள், தர்மம் செய்கிற பெண்கள், நோன்பாளியான ஆண்கள், நோன்பாளியான பெண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற ஆண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற ஆண்கள், நினைவு கூர்கின்ற பெண்கள் - இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70