يَٰنِسَآءَ ٱلنَّبِىِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ ٱلنِّسَآءِ إِنِ ٱتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِٱلْقَوْلِ فَيَطْمَعَ ٱلَّذِى فِى قَلْبِهِۦ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியின் மனைவிகளே! நீங்கள் (பொதுவான) பெண்களில் ஒருவரைப் போன்று இல்லை நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால். ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள். தனது உள்ளத்தில் நோய் உள்ளவன் தப்பாசைப்படுவான். இன்னும் சரியான (முறையான) பேச்சை பேசுங்கள்.
Tamil Translation - Omar Sharifநபியின் மனைவிகளே! நீங்கள் (பொதுவான) பெண்களில் ஒருவரைப் போன்று இல்லை, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி (மார்க்கத்தை பின்பற்றி) நடந்தால் (தகுதியால் மிக மேலானவர்களாக இருப்பீர்கள்). ஆகவே, (அந்நிய ஆண்களுடன் குழைந்து) மென்மையாகப் பேசாதீர்கள். அப்படிப் பேசினால் தனது உள்ளத்தில் நோய் உள்ளவன் (உங்கள் மீது) தப்பான ஆசைப்படுவான். ஆகவே, சரியான (முறையான) பேச்சைப் பேசுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறிய போதிலும்) யதார்த்தவாதிகளைப்போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள்.