caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 5

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:5

ٱدْعُوهُمْ لِـَٔابَآئِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ ٱللَّهِ فَإِن لَّمْ تَعْلَمُوٓا۟ ءَابَآءَهُمْ فَإِخْوَٰنُكُمْ فِى ٱلدِّينِ وَمَوَٰلِيكُمْ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَآ أَخْطَأْتُم بِهِۦ وَلَٰكِن مَّا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களை அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே) அழையுங்கள்! அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதமானது. நீங்கள் அவர்களின் தந்தைகளை அறியவில்லை என்றால் மார்க்கத்தில் அவர்கள் உங்கள் சகோதரர்கள் (ஆவார்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால். அப்படி இல்லை என்றால்) அவர்கள் உங்கள் உதவியாளர்கள் ஆவார்கள். நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றம் இல்லை. என்றாலும், எதை உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்று செய்ததோ (அதுதான் குற்றம் ஆகும்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஅவர்களை அவர்களது தந்தைகளுடன் சேர்த்தே அழையுங்கள்! அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதமானதாகும். ஆக, நீங்கள் அவர்களின் தந்தைகளை அறியவில்லை என்றால் மார்க்கத்தில் அவர்கள் உங்கள் சகோதரர்கள் (ஆவார்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால். அப்படி இல்லை என்றால்) அவர்கள் உங்கள் உதவியாளர்கள் ஆவார்கள். நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றம் இல்லை. என்றாலும், எ(ந்த பாவத்)தை உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்றே செய்ததோ அதுதான் குற்றம் ஆகும். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கிறது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்கள் மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க நண்பர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது நண்பரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. (எனினும், இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலே தவிர (அதுதான் உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மகா கருணை உடையவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70