caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 12

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:12

وَإِذْ يَقُولُ ٱلْمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥٓ إِلَّا غُرُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு பொய்யை (ஏமாற்றம் தரக்கூடியதை)த் தவிர (வேறு எதையும்) வாக்களிக்கவில்லை என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் (சந்தேக) நோய் உள்ளவர்களும் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு பொய்யை (ஏமாற்றம் தரக்கூடியதை)த் தவிர (உண்மையான வெற்றியை) வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70