ٱلنَّبِىُّ أَوْلَىٰ بِٱلْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَٰجُهُۥٓ أُمَّهَٰتُهُمْ وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍ فِى كِتَٰبِ ٱللَّهِ مِنَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُهَٰجِرِينَ إِلَّآ أَن تَفْعَلُوٓا۟ إِلَىٰٓ أَوْلِيَآئِكُم مَّعْرُوفًا كَانَ ذَٰلِكَ فِى ٱلْكِتَٰبِ مَسْطُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆன்மாக்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். அவருடைய மனைவிமார்கள் அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். இரத்த பந்தங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ற) நம்பிக்கையாளர்களையும் முஹாஜிர்களையும் விட. எனினும், உங்கள் பொறுப்பாளர்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்தால் தவிர. இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கின்றது.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். அவருடைய மனைவிமார்கள் அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். இரத்த பந்தங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ற) நம்பிக்கையாளர்களையும் முஹாஜிர்களையும் விட. எனினும், உங்கள் (வாரிசு அல்லாத) உங்கள் சொந்தங்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்தால் தவிர. இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi6. நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நம் தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களைவிடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தான் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப்பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் நண்பர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக்கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.