يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نَكَحْتُمُ ٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் முடித்தால், பிறகு அவர்களுடன் நீங்கள் உறவு வைப்பதற்கு முன்னர் அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் நீங்கள் கணக்கிட வேண்டிய எவ்வித இத்தாவும் உங்களுக்கு அவர்கள் மீது (கடமை) இல்லை. அவர்களுக்கு செல்வத்தை கொடுங்கள்! அழகிய முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொண்ட பெண்களை நீங்கள் திருமணம் முடித்தால், பிறகு அவர்களுடன் நீங்கள் உறவு வைப்பதற்கு முன்னர் அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் நீங்கள் கணக்கிட வேண்டிய இத்தா – தவணைக் காலம் ஏதும் உங்களுக்கு அவர்கள் மீது (கடமை) இல்லை. ஆக, (நீங்கள் விவாகரத்து செய்யும்போது) அவர்களுக்கு (உங்கள் வசதிக்கு ஏற்ப) செல்வத்தைக் கொடுங்கள்! இன்னும், அழகிய முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi49. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே ‘தலாக்' கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்கவேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள்.