caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 60

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:60

لَّئِن لَّمْ يَنتَهِ ٱلْمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْمُرْجِفُونَ فِى ٱلْمَدِينَةِ لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُونَكَ فِيهَآ إِلَّا قَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் (விபச்சார ஆசை) உள்ளவர்களும் மதீனாவில் கெட்ட விஷயங்களில் ஈடுபடுபவர்களும் (தங்கள் தீய செயல்களிலிருந்து) விலகவில்லை என்றால் உம்மை அவர்கள் மீது (அவர்களை தண்டிக்க) தூண்டிவிடுவோம். பிறகு, அவர்கள் அதில் உம்முடன் குறைவாகவே தவிர வசிக்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifநயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் (விபச்சார ஆசை) உள்ளவர்களும் மதீனாவில் கெட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களும் (தங்கள் கெட்ட செயல்களிலிருந்து) விலகவில்லை என்றால் அவர்கள் மீது (உம்மை சாட்டிவிட்டு அவர்களை நீர் தண்டிக்க) உம்மை தூண்டிவிடுவோம். பிறகு, அவர்கள் அதில் உம்முடன் குறைவாகவே தவிர வசிக்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. (நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும் (இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நாம் உம்மையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவோம். பின்னர், அதில் உமக்கு அருகில் வெகு சொற்ப நாள்களே தவிர அவர்கள் வசித்திருக்க முடியாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70