يَسْـَٔلُكَ ٱلنَّاسُ عَنِ ٱلسَّاعَةِ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ ٱللَّهِ وَمَا يُدْرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ تَكُونُ قَرِيبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்கள் உம்மிடம் மறுமையைப் பற்றி (அது எப்போது வரும் என்று) கேட்கின்றனர். (நபியே!) கூறுவீராக! அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது. மறுமை சமீபமாக இருக்கக்கூடும் என்பது உமக்குத் தெரியுமா?
Tamil Translation - Omar Sharifமக்கள் உம்மிடம் மறுமையைப் பற்றி (அது எப்போது வரும் என்று) கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக! அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. மறுமை சமீபமாக இருக்கக்கூடும் என்பது உமக்குத் தெரியுமா?
Tamil Translation - Abdulhamid Baqawi63. (நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘ (அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கிறது. நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்.''