وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِۦ وَتَعْمَلْ صَٰلِحًا نُّؤْتِهَآ أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியின் மனைவிகளே!) உங்களில் யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பணிந்து நடப்பாரோ, இன்னும் நன்மையை செய்வாரோ அவருக்கு அவரது கூலியை இருமுறை நாம் கொடுப்போம். இன்னும், அவருக்கு கண்ணியமான உணவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்.
Tamil Translation - Omar Sharif(நபியின் மனைவிகளே!) உங்களில் யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் பணிந்து (கீழ்ப்படிந்து) நடப்பாரோ, இன்னும் (மார்க்கம் கூறிய முறைப்படி) நன்மையை செய்வாரோ அவருக்கு அவரது கூலியை இருமுறை நாம் கொடுப்போம். இன்னும், அவருக்கு கண்ணியமான கூலியை (அவருக்காக) ஏற்படுத்தி வைத்திருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். மேலும், மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.