caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 8

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:8

لِّيَسْـَٔلَ ٱلصَّٰدِقِينَ عَن صِدْقِهِمْ وَأَعَدَّ لِلْكَٰفِرِينَ عَذَابًا أَلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉண்மையாளர்களை (-நபிமார்களை) அவர்களின் உண்மையைப் பற்றி (அவர்களின் சமுதாய மக்கள் அவர்களுக்கு என்ன பதில் கூறினர், ஏற்றார்களா, நிராகரித்தார்களா என்று) விசாரிப்பதற்காக (நபிமார்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம்). நிராகரிப்பாளர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை (அல்லாஹ்) ஏற்படுத்தி இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ் இந்த வாக்குறுதியை வாங்கியது) ஏனென்றால், உண்மையாளர்களை (-நபிமார்களை) அவர்களின் உண்மையைப் பற்றி (அவர்களின் சமுதாய மக்கள் அவர்களுக்கு என்ன பதில் கூறினார்கள், ஏற்றார்களா, நிராகரித்தார்களா என்று) விசாரிப்பதற்காக ஆகும். நிராகரிப்பாளர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை (அல்லாஹ்) ஏற்படுத்தி இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (அல்லாஹ்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70