تُرْجِى مَن تَشَآءُ مِنْهُنَّ وَتُـْٔوِىٓ إِلَيْكَ مَن تَشَآءُ وَمَنِ ٱبْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن تَقَرَّ أَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَآ ءَاتَيْتَهُنَّ كُلُّهُنَّ وَٱللَّهُ يَعْلَمُ مَا فِى قُلُوبِكُمْ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَلِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்களில் (-உமது மனைவிகளில்) நீர் நாடுகின்றவரை தள்ளிவைப்பீராக! நீர் நாடுகின்றவரை உம் பக்கம் சேர்த்துக்கொள்வீராக! நீர் நீக்கிவிட்டவர்களில் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ அது உம்மீது குற்றம் இல்லை. இது அவர்களின் கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும் நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு அவர்கள் எல்லோரும் திருப்தி அடைவதற்கும் சுலபமானதாகும். அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிவான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா சகிப்பாளனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அவர்களில் (-உமது மனைவிகளில்) நீர் நாடுபவரை தள்ளிவைப்பீராக! இன்னும், நீர் நாடுபவரை உம் பக்கம் சேர்த்துக்கொள்வீராக! நீர் நீக்கிவிட்டவர்களில் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ அது உம்மீது குற்றம் இல்லை. இது அவர்களின் கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும் நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு அவர்கள் எல்லோரும் திருப்தி அடைவதற்கும் நெருக்கமான(து இன்னும் சுலபமான)து ஆகும். அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிவான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா சகிப்பாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. (நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் விலக்கியவர்களில் நீர் விரும்பியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவற்றைப் பற்றி) உம் மீது ஒரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீர் அவர்களுக்குக் கொடுத்தவற்றைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கிறது. உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக, பொறுமையுடையவனாக இருக்கிறான்.