وَقَرْنَ فِى بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ ٱلْجَٰهِلِيَّةِ ٱلْأُولَىٰ وَأَقِمْنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعْنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ ٱلرِّجْسَ أَهْلَ ٱلْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் இல்லங்களில் தங்கியிருங்கள். (கண்ணியத்துடன் இருங்கள்.) முந்திய அறியாமைக் காலத்தில் அலங்காரங்களை வெளிப்படுத்தியது போன்று நீங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள். (முகத்தை திறந்தவர்களாக வெளியே செல்லாதீர்கள்.) தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! (நபியின்) வீட்டார்களே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் அசுத்தத்தை (பாவத்தை) போக்குவதற்கும் உங்களை முற்றிலும் சுத்தப்படுத்துவதற்கும்தான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்கள் இல்லங்களில் தங்கியிருங்கள். (அவசிய தேவை இன்றி வெளி இடங்களுக்கு செல்லாதீர்கள்.) முந்திய அறியாமைக் காலத்தில் அலங்காரங்களை வெளிப்படுத்தி(யவர்களாக வெளியே சுற்றி)யது போன்று நீங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள். (முகத்தை திறந்தவர்களாக வெளியே செல்லாதீர்கள்.) இன்னும், தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! (நபியின்) வீட்டார்களே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் அசுத்தத்தை (பாவத்தை) போக்குவதற்கும் உங்களை முற்றிலும் சுத்தப்படுத்துவதற்கும்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi33. (நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.