caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 72

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:72

إِنَّا عَرَضْنَا ٱلْأَمَانَةَ عَلَى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا ٱلْإِنسَٰنُ إِنَّهُۥ كَانَ ظَلُومًا جَهُولًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் அமானிதத்தை (-மார்க்கக் கட்டளையை) வானங்கள், பூமி(கள்), இன்னும் மலைகள் மீது சமர்ப்பித்தோம். அவை அதை சுமப்பதற்கு மறுத்துவிட்டன. அதனால் அவை பயந்தன. ஆனால், மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன் அநியாயக்காரனாக அறியாதவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் அமானிதத்தை (-மார்க்க சட்டங்களை) வானங்கள், பூமி(கள்), இன்னும் மலைகள் மீது சமர்ப்பித்தோம். அவை அதை சுமப்பதற்கு மறுத்துவிட்டன. இன்னும் அவை அதனால் பயந்தன. ஆனால், மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன் அநியாயக்காரனாக அறியாதவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi72. நிச்சயமாக ‘‘(நம்) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?'' என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் நாம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றிப் பயந்து, அதைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாதவனாக தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70