caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 20

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:20

يَحْسَبُونَ ٱلْأَحْزَابَ لَمْ يَذْهَبُوا۟ وَإِن يَأْتِ ٱلْأَحْزَابُ يَوَدُّوا۟ لَوْ أَنَّهُم بَادُونَ فِى ٱلْأَعْرَابِ يَسْـَٔلُونَ عَنْ أَنۢبَآئِكُمْ وَلَوْ كَانُوا۟ فِيكُم مَّا قَٰتَلُوٓا۟ إِلَّا قَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-நயவஞ்சகர்கள்) இராணுவங்கள் (தங்கள் ஊர்களுக்கு திரும்ப) செல்லவில்லை என்று எண்ணுகின்றனர். அந்த இராணுவங்கள் (திரும்ப) வந்தால் நிச்சயமாக கிராமவாசிகளுடன் கிராமங்களில் அவர்கள் இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுகின்றனர். உங்கள் செய்திகளைப் பற்றி அவர்கள் விசாரிக்கின்றனர். அவர்கள் உங்களுடன் இருந்தாலும் அவர்கள் (எதிரிகளிடம்) மிகக் குறைவாகவே தவிர போர் புரிந்திருக்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நயவஞ்சகர்களான) அவர்கள் (முஸ்லிம்கள் மீது போர் தொடுத்து வந்த எதிரி) ராணுவங்கள் (முஸ்லிம்களை அழிக்காமல் தங்கள் ஊர்களுக்கு திரும்ப) செல்லமாட்டார்கள் என்று எண்ணுகிறார்கள். இன்னும், அந்த ராணுவங்கள் (மீண்டும் ஒருமுறை) வந்தால் நிச்சயமாக கிராமவாசிகளுடன் கிராமங்களில் அவர்கள் தங்கி இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுகிறார்கள். உங்க(ளுக்கு என்ன ஆனது என்று உங்க)ள் செய்திகளைப் பற்றி அவர்கள் விசாரிக்கிறார்கள். அவர்கள் உங்களுடன் (போருக்கு வந்து) இருந்தாலும் (எதிரிகளிடம்) மிகக் குறைவாகவே தவிர போர் புரிந்திருக்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. (முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவங்கள் முற்றுகையை எடுத்துக் கொண்டுசென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த ராணுவங்கள் திரும்ப வந்துவிட்டாலோ ஒரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ தோல்வியுறுகிறீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கி இருந்தாலும், ஒரு சொற்ப நேரமே தவிர (அதிக நேரம்) போர் புரிய மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70