يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِنَّآ أَحْلَلْنَا لَكَ أَزْوَٰجَكَ ٱلَّٰتِىٓ ءَاتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّٰتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَٰلَٰتِكَ ٱلَّٰتِى هَاجَرْنَ مَعَكَ وَٱمْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ إِنْ أَرَادَ ٱلنَّبِىُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ ٱلْمُؤْمِنِينَ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىٓ أَزْوَٰجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநபியே! நீர் திருமணக் கொடைகளை (-மஹரை) கொடுத்(து மணமுடித்)த உமது மனைவிகளையும் அல்லாஹ் உமக்கு போரில் கொடுத்த அடிமைப் பெண்களில் உமது வலக்கரம் சொந்தமாகியவர்களையும் (-உமக்கு என்று வைத்துக்கொண்ட பெண்களையும்) உம்முடன் ஹிஜ்ரா செய்துவந்த உமது சாச்சாவின் மகள்களையும் உமது மாமியின் மகள்களையும் உமது தாய் மாமாவின் மகள்களையும் உமது காலா (சிறிய தாய், பெரிய தாய்) உடைய மகள்களையும் நிச்சயமாக நாம் உமக்கு (நீர் அவர்களை மணமுடிப்பதை) ஆகுமாக்கினோம். இன்னும், ஒரு முஃமினான பெண், தன்னை நபிக்கு அன்பளிப்பு செய்தால், நபியும் அவளை மணமுடிக்க நாடினால் அந்த பெண்ணையும் (உமக்கு ஆகுமாக்கினோம்). இது (மஹர் இன்றி மணமுடிப்பது பொதுவான) முஃமின்கள் அன்றி உமக்கு மட்டும் பிரத்தியோகமாகும். அவர்கள் மீது (-நம்பிக்கையாளர்கள் மீது) அவர்களின் மனைவிமார்கள் இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் (-அடிமைப் பெண்கள்) விஷயத்தில் நாம் கடமையாக்கியதை திட்டமாக நாம் அறிவோம். (நபியே!) உமக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக (நாம் மேற்கூறப்பட்ட பெண்களை மணமுடிப்பதையும் தன்னை அன்பளிப்புச் செய்யும் பெண்ணை மஹரின்றி மணமுடிப்பதையும் உமக்கு ஆகுமாக்கினோம்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifநபியே! நீர் அவர்களுக்கு (மஹ்ர் என்ற) திருமணக் கொடைகளை கொடுத்(து மணமுடித்)த உமது மனைவிகளையும் அல்லாஹ் உமக்கு போரில் கொடுத்த அடிமைப் பெண்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கியவர்களையும் (-உமக்கு என்று வைத்துக்கொண்ட பெண்களையும்) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்த உமது தந்தையின் உடன் பிறந்தவர்களின் மகள்களையும் உமது மாமியின் மகள்களையும் உமது தாய் மாமாவின் மகள்களையும் உமது தாயின் உடன்பிறந்த சகோதரிகளின் மகள்களையும் நிச்சயமாக நாம் உமக்கு (நீர் அவர்களை மணமுடிப்பதற்கு) ஆகுமாக்கினோம். இன்னும், ஒரு முஃமினான பெண், தன்னை நபிக்கு அன்பளிப்பு செய்தால், நபியும் அவளை மணமுடிக்க நாடினால் அந்த பெண்ணையும் உமக்கு ஆகுமாக்கினோம். இது (-மஹ்ர் இன்றி மணமுடிப்பது எல்லா) முஃமின்களுக்கும் அன்றி உமக்கு மட்டும் பிரத்தியோகமான சலுகையாகும். அவர்கள் மீது (-நம்பிக்கையாளர்கள் மீது) அவர்களின் மனைவிமார்கள் இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் (-அடிமைப் பெண்கள்) விஷயத்தில் நாம் கடமையாக்கியதை திட்டமாக நாம் அறிவோம். (நபியே!) உமக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக (நாம் மேற்கூறப்பட்ட பெண்களை மணமுடிப்பதையும் தன்னை அன்பளிப்புச் செய்யும் பெண்ணை மஹ்ரின்றி மணமுடிப்பதையும் உமக்கு ஆகுமாக்கினோம்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi50. நபியே! நிச்சயமாக நீர் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்களையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) கொடுத்தவர்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். உமது தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உமது அத்தையின் மகள்கள், உமது தாய்மாமனின் மகள்கள், உமது தாயின் சகோதரியுடைய மகள்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீர் திருமணம் செய்துகொள்ள நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். மேலும்) நம்பிக்கை கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். (நபியே!) இது சொந்தமாக உமக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கல்ல. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது சட்டமாக்கி இருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உமக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உமக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.