وَرَدَّ ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا۟ خَيْرًا وَكَفَى ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ ٱلْقِتَالَ وَكَانَ ٱللَّهُ قَوِيًّا عَزِيزًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்களை அவர்களது கோபத்துடன் அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் (இந்தப் போரினால்) எந்த நன்மையையும் அடைய வில்லை. நம்பிக்கையாளர்களை போரை விட்டும் அல்லாஹ் பாதுகாத்தான். அல்லாஹ் மகா வலிமை மிக்கவனாக, மிகைத்தவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிராகரிப்பாளர்களை அவர்களது கோபத்துடன் அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் (இந்தப் போரினால்) எந்த நன்மையையும் அடையவில்லை. இன்னும், (நம்பிக்கையாளர்கள் கடுமையாக) சண்டை செய்(து அதிகமான இழப்புகள் அவர்களுக்கு ஏற்படு)வதை விட்டும் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பாதுகாத்தான். அல்லாஹ் மகா வலிமைமிக்கவனாக, மிகைத்தவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்து விட்டான். (இப்போரில்) அவர்கள் ஒரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமே அடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே பாதுகாத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்.