قَدْ يَعْلَمُ ٱللَّهُ ٱلْمُعَوِّقِينَ مِنكُمْ وَٱلْقَآئِلِينَ لِإِخْوَٰنِهِمْ هَلُمَّ إِلَيْنَا وَلَا يَأْتُونَ ٱلْبَأْسَ إِلَّا قَلِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் (நபியை விட்டு மக்களை) தடுப்பவர்களையும் தங்கள் சகோதரர்களுக்கு, எங்களிடம் வந்துவிடுங்கள் என்று சொல்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர (பெரும்பாலும்) போருக்கு வரமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஉங்களில் (நபியை விட்டு மக்களை) தடுப்பவர்களையும்; தங்கள் சகோதரர்களுக்கு, “எங்களிடம் வந்துவிடுங்கள் (நபியுடன் போருக்கு செல்லாதீர்கள்)” என்று சொல்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர போருக்கு வரமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் ‘‘(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்து விடுங்கள்'' என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை.