caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 37

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:37

وَإِذْ تَقُولُ لِلَّذِىٓ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخْفِى فِى نَفْسِكَ مَا ٱللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَىٰهُ فَلَمَّا قَضَىٰ زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَٰكَهَا لِكَىْ لَا يَكُونَ عَلَى ٱلْمُؤْمِنِينَ حَرَجٌ فِىٓ أَزْوَٰجِ أَدْعِيَآئِهِمْ إِذَا قَضَوْا۟ مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ இன்னும் நீர் அருள் புரிந்தீரோ அவருக்கு, “உன் மனைவியை உன்னுடன் வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!” என்று நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடியவனாக உள்ள ஒன்றை உமது உள்ளத்தில் நீர் மறைக்கிறீர். மக்களை பயப்படுகின்றீர். அல்லாஹ்தான், அவனை நீர் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். சைது அவளிடம் தேவையை முடித்துவிட்டபோது, -நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவிகள் விஷயத்தில், அவர்களிடம் (-அந்த மனைவிகளிடம்) அவர்கள் (-அந்த வளர்ப்புப் பிள்ளைகள்) தேவையை முடித்துவிட்டபோது (அப்பெண்களை வளர்ப்புப் பிள்ளைகளின் தந்தைகள் திருமணம் முடித்துக் கொள்வதில்) சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக- அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம். அல்லாஹ்வின் காரியம் (கண்டிப்பாக) நடக்கக்கூடியதாக இருக்கின்றது.
Tamil Translation - Omar Sharifஎவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ; இன்னும், நீர் அருள் புரிந்தீரோ அவரை நோக்கி, “நீ உன் மனைவியை உன்னுடன் வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!” என்று நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! இன்னும், அல்லாஹ் எதை வெளிப்படுத்தக் கூடியவனாக இருக்கிறானோ அதை உமது உள்ளத்தில் நீர் மறைக்கிறீர். இன்னும், மக்களை பயப்படுகிறீர். அல்லாஹ்தான், நீர் அவனை பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். ஸைது, அவளிடம் (திருமணத்) தேவையை முடித்து (அவளை விவாகரத்து செய்து) விட்டபோது அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம். இது ஏனெனில், நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின் மனைவிகள் விஷயத்தில், அவர்களிடம் (-அந்த மனைவிகளிடம்) அவர்கள் (-அந்த வளர்ப்புப் பிள்ளைகள் திருமணத்) தேவையை முடித்து (விவாகரத்து செய்து) விட்டால் அப்போது (அப்பெண்களை வளர்ப்புப் பிள்ளைகளின் தந்தைகள் திருமணம் முடித்துக் கொள்வதில்) சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஆகும். அல்லாஹ்வின் காரியம் (கண்டிப்பாக) நடக்கக்கூடியதாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi37. (நபியே!) அல்லாஹ்வும், நீரும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி ‘‘ நீ அல்லாஹ்வுக்குப் பயந்து உன் மனைவியை (நீக்காது) உன்னிடமே நிறுத்திக் கொள்'' என்று கூறிய சமயத்தில், நீர் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்தீர். நீர் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) ‘ஜைது' (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70