مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுஹம்மது உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifமுஹம்மத் உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. (நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் ஒரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.