caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 22

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:22

وَلَمَّا رَءَا ٱلْمُؤْمِنُونَ ٱلْأَحْزَابَ قَالُوا۟ هَٰذَا مَا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥ وَصَدَقَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَمَا زَادَهُمْ إِلَّآ إِيمَٰنًا وَتَسْلِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்கள் இராணுவங்களைப் பார்த்தபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு வாக்களித்ததாகும் இது. அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மை கூறினார்கள்” என்று கூறினார்கள். அது (-இராணுவங்களின் வருகை) நம்பிக்கையையும் திருப்தி (-கட்டுப்படுதலையும் பொறுமை)யையும் தவிர (வேறெதையும்) அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நம்பிக்கையாளர்கள் (எதிரி) ராணுவங்களைப் பார்த்தபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு வாக்களித்ததாகும் இது; அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மை உரைத்தார்கள்” என்று கூறினார்கள். அ(ந்த எதிரி ராணுவங்களின் வருகையான)து, (அல்லாஹ்வின் மீது) நம்பிக்கையையும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) கட்டுப்படுதலையும் தவிர அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi22. நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70