لِّيَجْزِىَ ٱللَّهُ ٱلصَّٰدِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ ٱلْمُنَٰفِقِينَ إِن شَآءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, அல்லாஹ் உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கு நற்கூலி தருவான். நயவஞ்சகர்களை அவன் நாடினால் தண்டிப்பான். அல்லது அவர்களை பிழை பொறு(த்து ஈமானை ஏற்கவை)ப்பான். (ஆகவே, அவர்களின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு பெறுவார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஇறுதியாக, அல்லாஹ் உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கு நற்கூலி தருவான். இன்னும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் தண்டிப்பான். அல்லது, அவர்கள் திருந்தும்படி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.