مَّا جَعَلَ ٱللَّهُ لِرَجُلٍ مِّن قَلْبَيْنِ فِى جَوْفِهِۦ وَمَا جَعَلَ أَزْوَٰجَكُمُ ٱلَّٰٓـِٔى تُظَٰهِرُونَ مِنْهُنَّ أُمَّهَٰتِكُمْ وَمَا جَعَلَ أَدْعِيَآءَكُمْ أَبْنَآءَكُمْ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَٰهِكُمْ وَٱللَّهُ يَقُولُ ٱلْحَقَّ وَهُوَ يَهْدِى ٱلسَّبِيلَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவனது உடலில் இரு உள்ளங்களை அமைக்கவில்லை. நீங்கள் ளிஹார் செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்கள் தாய்மார்களாக அவன் ஆக்கவில்லை. உங்கள் வளர்ப்புப் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அவன் ஆக்கவில்லை. அது உங்கள் வாய்களால் நீங்கள் கூறுவதாகும். அல்லாஹ் உண்மையை கூறுகின்றான். அவன்தான் நல்ல பாதைக்கு வழிகாட்டுகின்றான்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவனது உடலில் இரு உள்ளங்களை அமைக்கவில்லை. இன்னும், நீங்கள் ளிஹார் செய்த உங்கள் மனைவிகளை உங்கள் தாய்மார்களாக அவன் ஆக்கவில்லை. இன்னும், உங்கள் வளர்ப்பு பிள்ளைகளை உங்கள் சொந்த பிள்ளைகளாக அவன் ஆக்கவில்லை. அது உங்கள் வாய்களால் நீங்கள் கூறுவதாகும். அல்லாஹ் உண்மையை கூறுகிறான். அவன்தான் நல்ல பாதைக்கு வழிகாட்டுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்கள் (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்கள் பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே (தவிர. உண்மையல்ல). அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்.