caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 43

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:43

هُوَ ٱلَّذِى يُصَلِّى عَلَيْكُمْ وَمَلَٰٓئِكَتُهُۥ لِيُخْرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَكَانَ بِٱلْمُؤْمِنِينَ رَحِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் உங்கள் மீது அருள் புரிவான், இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் உங்களை அவன் வெளியேற்றுவதற்காக. இன்னும், அவனது வானவர்கள் (உங்களுக்காக அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பார்கள். அவன் நம்பிக்கையாளர்கள் மீது மகா கருணையுள்ளவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஅவன் இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் உங்களை வெளியேற்றுவதற்காக உங்கள் மீது விசேஷமாக அருள் புரிகிறான். இன்னும், அவனது வானவர்கள் (உங்களுக்காக அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கிறார்கள். அவன் நம்பிக்கையாளர்கள் மீது மகா கருணையாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70