وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ ٱلْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ ضَلَّ ضَلَٰلًا مُّبِينًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையுடைய ஆணுக்கும் நம்பிக்கையுடைய பெண்ணுக்கும் தங்களது காரியத்தில் அவர்களுக்கு என்று ஒரு விருப்பம் இருப்பது ஆகுமானதல்ல அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வாரோ அவர் திட்டமாக தெளிவாக வழிகெட்டுவிட்டார்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கை கொண்ட ஆணுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்ணுக்கும் தங்களது காரியத்தில் அவர்களுக்கு என்று ஒரு விருப்பம் இருப்பது ஆகுமானதல்ல, அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவுசெய்துவிட்டால். ஆக, யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வாரோ அவர் திட்டமாக தெளிவாக வழிகெட்டுவிட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.