முகப்பு › அத்தியாயங்கள் › An-Najm அத்தியாயம்
An-Najm அத்தியாயம் النجم
62 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 23
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்கள் தோழர் (சத்திய பாதையிலிருந்து) வழி தவறவுமில்லை, (நேரிய கொள்கையிலிருந்து) வழி கெடவுமில்லை. (அவர் நேர்வழியிலும் சரியான கொள்கையிலும்தான் இருக்கிறார்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (இந்த குர்ஆனை) மன இச்சையால் அவர் பேச மாட்டார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர வேறு இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆற்றலால் வலிமை மிக்கவர் (-ஜிப்ரீல்) இவருக்கு இதை கற்பித்தார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர் (வலிமையும்) அழகிய தோற்றமு(ம் உ)டையவர். ஆக, அவர் (நபியை நேருக்கு நேர்) சமமாக சந்தித்தார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (தூதரான) அவரும் (வானவரான ஜிப்ரீலும்) மிக உயர்ந்த வான உச்சியில் (நேருக்கு நேர் சமமானார்கள்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, அவர் (அவருக்கு) நெருக்கமானார். இன்னும் மிக அதிகமாக (அவரை) நெருங்கினார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர் (அவருக்கு) இரண்டு வில்லின் அளவுக்கு அல்லது அதைவிட மிக நெருக்கமாக ஆகிவிட்டார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவனுடைய (-அல்லாஹ்வுடைய) அடிமை(யாகிய நபி)க்கு ஜிப்ரீல் (தமக்கு) எதை (தமது இறைவன்) வஹ்யி அறிவித்தானோ அதை (நபி அவர்களுக்கு) வஹ்யி அறிவித்தார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபி) எதை (தனது கண்களால்) பார்த்தாரோ அதை (அவருடைய) உள்ளம் பொய்ப்பிக்கவில்லை. (உள்ளமும் அதை நம்பிக்கை கொண்டது.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version திட்டவட்டமாக அவர் (-நபி முஹம்மத்) அவரை (-ஜிப்ரீலை) மற்றொரு முறைப் பார்த்தார்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version “ஸித்ரத்துல் முன்தஹா” என்ற இடத்தில்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அங்குதான் அல்மஃவா சொர்க்கம் இருக்கின்றது. (ஸித்ரதுல் முன்தஹா -இறுதி இடத்தில் உள்ள இலந்தை மரம்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version எது சூழ்ந்து கொள்ளுமோ அது அந்த ஸித்ராவை (-இலந்தை மரத்தை) சூழ்ந்து கொள்ளும் போது (அவர் அவரை மற்றொரு முறை பார்த்தார்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபியின்) பார்வை (அவர் பார்த்ததை விட்டும் இங்கும் அங்கும்) சாயவில்லை, (அல்லாஹ் அவருக்கு நிர்ணயித்த எல்லையை) மீறவுமில்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version திட்டவட்டமாக அவர் தனது இறைவனின் பெரிய அத்தாட்சிகளில் (ஒன்றைப்) பார்த்தார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَرَءَيْتُمُ ٱللَّٰتَ وَٱلْعُزَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version லாத், உஸ்ஸா பற்றி நீங்கள் அறிவியுங்கள்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், மற்றொரு மூன்றாவது மனாத்தைப் பற்றி அறிவியுங்கள்! (-இவை, அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள் என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்?)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்களுக்கு (நீங்கள் விரும்புகின்ற) ஆண்பிள்ளையும் அவனுக்கு (நீங்கள் உங்களுக்கு வெறுக்கின்ற) பெண் பிள்ளையுமா? (இப்படியா நீங்கள் கற்பனை செய்கின்றீர்கள்)!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அப்படியென்றால் இது ஒரு அநியாயமான பங்கீடாகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இவை எல்லாம் வெறும் பெயர்களே தவிர வேறில்லை. இவற்றுக்கு நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் வைத்தீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புகின்றதையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி திட்டவட்டமாக வந்துள்ளது (அதாவது இவற்றை வணங்குவது கூடாது, வணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே தவிர வேறு யாருக்கும் தகுதியாகாது.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்துவிடுமா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உரியது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَكَم مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَٰوَٰتِ لَا تُغْنِى شَفَٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version வானங்களில் உள்ள எத்தனையோ வானவர்கள், அவர்களின் சிபாரிசு (அல்லாஹ்வின் வேதனையில் இருந்து) எதையும் தடுக்காது அல்லாஹ்வின் அனுமதிக்கு பின்னரே தவிர, (அதுவும்) அவன் நாடுகின்ற, அவன் விரும்புகின்றவருக்கு (மட்டுமே பலன் தரும்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் வானவர்களுக்கு பெண்களின் பெயர்களை பெயர் சூட்டுகின்றார்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்களுக்கு அ(வர்கள் செய்வ)தைப் பற்றி எவ்வித கல்வி அறிவும் இல்லை. அவர்கள் வீண் எண்ணத்தைத் தவிர வேறு எதையும் பின்பற்றுவதில்லை. நிச்சயமாக வீண் எண்ணம் உண்மைக்கு பதிலாக அறவே பலன் தராது. (உண்மையின் இடத்தில் வீண் எண்ணம் நிற்கமுடியாது.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, நமது நினைவை விட்டு (-குர்ஆனை விட்டு) விலகியவர்களை (நபியே!) நீர் புறக்கணிப்பீராக! அவர்கள் உலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் நாடவில்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதுதான் அவர்களது கல்வியின் முதிர்ச்சியாகும். நிச்சயமாக உமது இறைவன்தான் தனது பாதையை விட்டு வழிதவறியவர்களை மிக அறிந்தவன். இன்னும் அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى
Tamil Translation - Omar Sharif - Abridged Version வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன. இறுதியில், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் செய்தவற்றுக்கு (தகுந்த தண்டனையை) அவன் கூலி(யாகக்) கொடுப்பான்; நன்மை செய்தவர்களுக்கு சொர்க்கத்தை அவன் கூலி(யாகக்) கொடுப்பான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் பெரும் பாவங்கள், இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும் விலகி இருப்பார்கள், சிறு தவறுகளைத் தவிர. (அந்த சிறு தவறுகளை அல்லாஹ் அவர்களுக்கு மன்னித்து விடுவான்.) நிச்சயமாக உமது இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். அவன் உங்களை பூமியில் இருந்து உருவாக்கிய போதும் (ஆதமை மண்ணிலிருந்து படைத்த போதும், பிறகு,) நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும் அவன் உங்களை (-யார் நல்லவர், யார் தீயவர் என்று) மிக அறிந்தவனாக இருக்கின்றான். ஆகவே, உங்களை நீங்களே (தூய்மையானவர்களாக) பீத்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவன் மிக அறிந்தவன் ஆவான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபியே!) நீர் அறிவிப்பீராக! ஒருவன் (இந்த மார்க்கத்தை விட்டு) புறக்கணித்தான்;
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், (தனது நண்பனுக்கு தனது செல்வத்தில் இருந்து) கொஞ்சம் கொடுத்தான். பிறகு, (அதை கருமித்தனத்தால்) நிறுத்திவிட்டான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவனிடம் மறைவானவற்றின் அறிவு இருக்கிறதா? அவன் (என்ன அவற்றைப்) பார்க்கின்றானா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version மூஸாவின் ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் (தனது தூதுத்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஏட்டில் உள்ளதைப் பற்றி அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அதாவது, பாவம் செய்த ஆன்மா இன்னொரு பாவியான ஆன்மாவின் பாவத்தை சுமக்காது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், மனிதனுக்கு அவன் எதை அடைய முயற்சித்தானோ அதைத் தவிர வேறு ஏதும் இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், நிச்சயமாக தனது முயற்சியை (-தனது முயற்சியின் பலனை) அவன் விரைவில் காண்பான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, மிக பூரணமான கூலியை அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், நிச்சயமாக அவன்தான் சிரிக்க வைக்கிறான்; அழ வைக்கிறான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கிறான்; உயிர் கொடுக்கிறான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், நிச்சயமாக அவன்தான் (ஒவ்வொரு படைப்பினத்திலும்) ஜோடிகளை - ஆணையும் பெண்ணையும் - படைத்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (கருவறையில்) இந்திரியமாக செலுத்தப் படுகின்ற இந்திரியத்தில் இருந்து (படைத்தான்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் நிச்சயமாக அவன் மீதே மற்றொரு முறை (இவர்களை) உருவாக்குவதும் கடமையாக இருக்கிறது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் நிச்சயமாக அவன்தான் (சிலரை) செல்வந்தராக ஆக்கினான்; (அவர்களுக்கு) சேமிப்பைக் கொடுத்தான். (இன்னும் சிலரை ஏழ்மையில் வைத்தான்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் நிச்சயமாக அவன்தான் ஷிஃரா நட்சத்திரத்தின் இறைவன் ஆவான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் நிச்சயமாக அவன்தான் முந்திய ஆது சமுதாயத்தை அழித்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் ஸமூது சமுதாயத்தை (அழித்தான்). ஆக, அவன் (இவர்களில் எவரையும்) விட்டு வைக்கவில்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (அவன் அழித்தான்). நிச்சயமாக இவர்கள் மிகப் பெரிய அநியாயக்காரர்களாக, மிகப் பெரிய வரம்பு மீறிகளாக இருந்தனர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தை அவன்தான் (தலைக் கீழாக) கவிழ்த்(து அவர்களை அழித்)தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version எதைக் கொண்டு மூட வேண்டுமோ அதனால் அவன் அவர்களை மூடினான். (சுடப்பட்ட பொடிக் கற்களை அவர்கள் மீது அடை மழையாக அவன் பொழிவித்தான்.)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உமது இறைவனின் அத்தாட்சிகளில் எதில் நீ தர்க்கம் செய்கின்றாய்?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
هَٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version முந்திய எச்சரிப்பாளர்களில் இருந்து (அவர்களைப் போன்ற) ஓர் எச்சரிப்பாளர்தான் இவர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நெருங்கி வரக்கூடிய (-மறுமையான)து நெருங்கிவிட்டது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அல்லாஹ்வை அன்றி அதை (-அதன் திடுக்கங்களை) வெளிப்படுத்துபவர் யாரும் அதற்கு இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இந்த குர்ஆனினால் நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? (-இதை கேலி செய்கிறீர்களா?)
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (அதன் எச்சரிக்கையால்) நீங்கள் (பயந்து) அழாமல், (திமிரு கொண்டு) சிரிக்கிறீர்களா?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَنتُمْ سَٰمِدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீங்களோ (அதை) அலட்சியம் செய்பவர்களாக (-கவனமற்றவர்களாக, புறக்கணித்தவர்களாக, பெருமைபிடித்தவர்களாக, கவிபாடியவர்களாக) இருக்கிறீர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்விற்கே சிரம் பணியுங்கள்! (அவன் ஒருவனையே) வணங்குங்கள்!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
← At-Tur அத்தியாயம்
Al-Qamar அத்தியாயம் →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→
அரபு மூலமும் மொழிபெயர்ப்புகளும் Tanzil மற்றும் QuranEnc வழியாக — சொல்லுக்குச் சொல், மாற்றப்படாமல் · மொழிபெயர்ப்புகள் அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரியவை; குர்ஆன் அல்ல
இது ஓர் ஆய்வு உதவியாகும்; மார்க்கத் தீர்ப்பின் ஆதாரம் அல்ல.