وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன. இறுதியில், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் செய்தவற்றுக்கு (தகுந்த தண்டனையை) அவன் கூலி(யாகக்) கொடுப்பான்; நன்மை செய்தவர்களுக்கு சொர்க்கத்தை அவன் கூலி(யாகக்) கொடுப்பான்.
Tamil Translation - Omar Sharifவானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன. இறுதியில், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் செய்தவற்றுக்கு (தகுந்த தண்டனையை) அவன் கூலி(யாகக்) கொடுப்பான். இன்னும், நன்மை செய்தவர்களுக்கு (மிக அழகிய) சொர்க்கத்தை அவன் கூலி(யாகக்) கொடுப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கிறான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கிறான்.